Advertisment

விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர்.1 வீராங்கனை ஹாலெப் அதிர்ச்சி தோல்வி!

விம்பிள்டன் டென்னிஸில் நம்பர்.1 வீராங்கனை ஹாலெப் தோல்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர்.1 வீராங்கனை ஹாலெப் அதிர்ச்சி தோல்வி!

Wimbledon Tennis 2018

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர்.1 வீராங்கனை சிமோனா ஹாலெப் 3-வது சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.

Advertisment

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் தங்களது 3-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றவரும், உலகின் நம்பர்.1 வீராங்கனையுமான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், 3-வது சுற்றில் தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள சீன தைபேவை சேர்ந்த சு-வெய் ஹிசை எதிர்கொண்டார். இதில், 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி 20 நிமிடங்கள் போராடி ஹாலெப் வீழ்ந்தார். 32 வயதான சு-வெய், விம்பிள்டனில் முதல் முறையாக 4-வது சுற்றை எட்டினார்.

இதேபோல் நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த 5 முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 7-6 (7-5), 6-8 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

அதே சமயம் 7 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தன்னை எதிர்த்த மிலாடெனோவிச்சை (பிரான்ஸ்) 7-5, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக 2-வது சுற்றில் நடந்த ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-5, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் அலிசன் வான் உய்ட்வான்கிடம் (பெல்ஜியம்) தோற்று வெளியேறினார்.

போட்டித் தரநிலையில் முதல் 10 இடங்களை பெற்ற வீராங்கனைகளில் தற்போது 9 பேர் தோற்று வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Wimbledon Tennis Simona Halep
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment