Advertisment

5 மணி நேரம்; கிடுக்குப்பிடி விசாரணை - குறி வைக்கப்படுகிறாரா குமார் சங்கக்காரா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kumar Sangakkara, world cup 2011 match fixing, குமார் சங்கக்காரா, விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள்

Kumar Sangakkara, world cup 2011 match fixing, குமார் சங்கக்காரா, விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள்

இந்தியாவின் 2011 உலகக் கோப்பை வெற்றியை உறுதி செய்வதற்காக, இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக கூறி, இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

Advertisment

இதைத் தொடர்ந்து, இலங்கை போலீசார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக விளையாட்டு அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவஞ்சந்திரா அறிவித்தார்.

வெ.இ., கிரிக்கெட்டின் 'கிரேட்' எவர்டன் வீக்ஸ் காலமானார் - ஆச்சர்யப்படுத்தும் ரெக்கார்டுகள்

இந்நிலையில், 2011 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்கு கேப்டனாக செயல்பட்ட குமார் சங்கக்காரா இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விளையாட்டு அமைச்சகத்தின் காவல்துறை பிரிவுக்கு அழைக்கப்பட்ட குமார் சங்கக்காராவிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினார்கள்.

2, 2020

அவரிடம் விசாரணை நடந்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், விளையாட்டு அமைச்சக அலுவலகத்தின் வெளியே, குமார் சங்கக்காராவிடம் நடத்தப்படும் விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

2, 2020

போராட்டத்தை ஏற்பாடு செய்த சமகி ஜன பலவேகயாவின் இளைஞர் பிரிவு தரப்பில் கூறுகையில், "ஆதாரமற்ற மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குமார் சங்கக்கார மற்றும் பிற கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து துன்புறுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்" என தெரிவிக்கப்பட்டது.

 

2, 2020

கட்சியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவும் விசாரணைக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார்.

இலங்கையில் குறிப்பாக, குமார் சங்கக்காரா மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிக வன்மத்தை வீசுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Kumar Sangakaara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment