Advertisment

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் ட்ராவில் முடிந்தால் என்ன ஆகும்? ஐசிசியின் புதிய திட்டம்!

ICC Announces Playing Conditions India - New Zealand WTC Tamil News: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி டெஸ்ட் போட்டி ஒரு வேளை ட்ராவில் முடிந்தால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஐசிசி.

author-image
WebDesk
New Update
World Test Championship Final Tamil News: ICC Announces Playing Conditions India - New Zealand WTC

World Test Championship Final Tamil News: உலக கிரிக்கெட் அரங்கில் புதிய முயற்சியாக கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள், உலக டெஸ்ட் அணிகள் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்தாண்டுக்கான உலக டெஸ்ட் அணிகள் தரவரிசை பட்டியலில் 121 மதிப்பீட்டு புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தையும், 120 மதிப்பீட்டு புள்ளிகளுடநியூசிலாந்து அணி 2ம் இடத்தையும் பிடித்துள்ளன.

Advertisment

இதனையடுத்து இந்த இரு அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி அடுத்த மாதம் (ஜூன்) 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டி ஒரு வேளை ட்ராவில் முடிந்தால் என்ன ஆகும் என்ற கேள்வி கிரிக்கெட் ஆர்வலர்களை தொற்றிக் கொண்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் ஐசிசி ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் படி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஒரு வேளை ட்ராவில் முடிந்தால், இரு அணிகளுமே சாம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. இருப்பினும், எப்போதையும் விட கூடுதலாக ஒரு நாளை இந்த போட்டிக்காக அறிமுகம் செய்துள்ளதாகவும் ஐசிசி குறிப்பிட்டுள்ளது. அந்த நாள் 'ரிசர்வ் டே' என்று அழைக்கப்பட உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி நாளொன்றுக்கு 6 மணி நேரம் வீதம், 5 நாட்களில் 30 மணி நேரம் நடைபெறும். ஒருவேளை மோசமான வானிலை, வெளிச்சமின்மை போன்ற பிரச்னைகளால் ஒரு நாளுக்கே உண்டான போட்டி தடைபட்டால் மட்டுமே (Reserve day) ஆறாவது நாள் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டைத் தவிர,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு என மூன்று புதிய விதிகளை ஐசிசி அறிவித்துள்ளது. ஷார்ட் ரன்ஸ், பிளேயர் ரிவியூ, டிஆர்எஸ் ரிவியூ ஆகியவை ஆகும்.

ஷார்ட் ரன்னை பொறுத்தவரை, டி.வி. அம்பயர் ஆன்-ஃபீல்ட் நடுவரின் ஷார்ட் ரன் அழைப்பை "தானாகவே மதிப்பாய்வு செய்வார்" மற்றும் அடுத்த பந்து வீசப்படுவதற்கு முன்பு தனது முடிவைப் பற்றி அவரிடம் கூறுவார்.

எல்.பி.டபிள்யூ மதிப்பாய்வை எடுக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கு முன்பு வெளியேறிய வீரர்கள் அல்லது பீல்டிங் கேப்டன் பந்தை விளையாடுவதற்கான உண்மையான முயற்சி மேற்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை ஆன்-பீல்ட் நடுவர் மூலம் உறுதிப்படுத்தலாம்.

எல்.பி.டபிள்யூ மதிப்புரைகளைப் பொறுத்தவரை, "உயரம் மற்றும் அகலம் ஆகிய இரண்டிற்கும் ஸ்டம்புகளைச் சுற்றி அதே நடுவரின் அழைப்பு விளிம்பை உறுதி செய்வதற்காக விக்கெட் பகுதியின் உயர விளிம்பு ஸ்டம்புகளின் மேலே உயர்த்தப்பட்டுள்ளது என்று இந்த 3 விதிகள் குறித்து ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

India India Vs New Zealand Sports Cricket World Test Championship Kane Williamson New Zealand Captain Virat Kholi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment