Advertisment

IND vs AUS WTC 2023 Final: கையில் கருப்பு பட்டை அணிந்த இந்திய- ஆஸி,. வீரர்கள்… காரணம் இதுதான்!

இன்று தொடங்கிய உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
WTC Final 2023: Why is India and Australia Players wearing black armbands? Tamil News

Indian and Australian players wore black armbands on their left sleeves and observed a minute’s silence during the WTC 2023 final on Wednesday.

 IND vs AUS WTC FINAL LIVE SCORE, DAY 1 - LATEST UPDATES IN TAMIL: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சுவதாக அறிவித்தார். அதனால், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisment

கையில் கருப்பு பட்டை அணிந்த இந்திய வீரர்கள்

இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் ஒடிசாவில் நடந்த ரயில்கள் விபத்தில் உயிரிழந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கருப்புப் பட்டை அணிந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாட்டு அணிகளின் தேசிய கீதங்களுக்கு முன்பாக உயிரிழந்தவர்களின் நினைவாக வீரர்கள் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

"இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கிறோம். மற்றும் பரிதாபமாக உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Bcci Sports London England India Vs Australia Indian Cricket World Test Championship Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment