yuvraj singh about ms dhoni 2011 world cup cricket news
2011 உலகக்கோப்பையில் தான், யூசுப் பதான், ரெய்னா இவர்களில் யாரைத் தேர்வு செய்வது என்பதில் தோனி எப்போதும் ரெய்னாவுக்கு பக்கபலமாகவே திகழ்வார் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஸ்போர்ட்ஸ் டாக் என்பதில் யுவராஜ் சிங் தெரிவிக்கும் போது, “சுரேஷ் ரெய்னாவுக்கு அப்போது பெரிய ஆதரவு இருந்தது, காரணம் தோனி அவரை எப்போதும் சப்போர்ட்டிவாக இருப்பார். ஒவ்வொரு கேப்டனுக்கும் பிடித்த வீரர் என்று யாராவது இருப்பார்கள், 2011 உலகக்கோப்பையின் போது தோனிக்கு ரெய்னாதான்.
யூசுப் பதானும் அப்போது பிரமாதமாக ஆடி வந்தார். நானும் நன்றாக ஆடினேன், விக்கெட்டுளை கைப்பற்றினேன். அப்போது இடது கை ஸ்பின்னர் அணியில் இல்லை; நான் விக்கெட்டுகளைக் கைப்பற்றி வந்தேன், அதனால் அவர்களுக்கு வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், கங்குலி தான் என்றைக்கும் எனக்கு பிடித்த கேப்டன். நாங்கள் இளம் வீரர்களாக இருந்த போதும், எங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகளை கொடுத்தார். எனக்கு அவர் பெரும் ஆதரவு கொடுத்தார். தாதா தான் எனது பேவரைட்" என்றும் யுவராஜ் கூறியுள்ளார்.
பொதுவாக, கேப்டன்களாக இருப்பவர்கள் மீதும், இருந்தவர்கள் மீதும் இதுபோன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இன்னும் சொல்லப் போனால் தவறும் அல்ல. ஒரு திறமையான வீரரை வெளியே உட்கார வைத்து, திறமையற்ற வீரருக்கு வாய்ப்புகள் கொடுத்தால் தான் தவறே ஒழிய, தனக்கு பிடித்த மற்றொரு திறமையான வீரருக்கு கேப்டன் வாய்ப்பு கொடுப்பது தவறாக இருக்க முடியாது. ஏனெனில், ரெய்னா இந்தியாவுக்கு பல போட்டிகள் வெற்றிமகனாக இருந்தவர்.
இத்தனைக்கும் யுவராஜ் சிங், கங்குலி கேப்டன்ஷிப்பில் குவித்த ரன்களை விட, படைத்த சாதனைகளை விட தோனி கேப்டன்ஷிப்பில் அவர் படைத்த சாதனைகளே அதிகம். யுவராஜின் ஒருநாள் கிரிக்கெட் ஆவரேஜே, தோனியின் கேப்டன்ஷிப்பில் தான் கூடியது. புள்ளிவிவரங்களோடு பேசினால் யுவராஜின் ஒவ்வொரு வாதத்துக்கும் தோனி தரப்பில் பதிலடி கொடுக்க முடியும் என்பதே இந்த விவகாரத்தின் யதாரத்தமான உண்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”