அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, சரியான நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவேன் என்றும் மக்களவைத் தேர்தலை அதிமுக ஒற்றுமையாக எதிர்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் சி.என். அண்ணாதுரையின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அனைவரும் அண்ணா வழியில் நடப்போம் என்று கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்தை முன்வைத்து நடந்து வரும் சர்ச்சை குறித்து கேட்டதற்கு, சரியான நேரம் வரும்போது அதிமுக தலைமையகத்திற்கு வருவேன் என்றும் 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒன்று கூடுவோம் என்றும் கூறினார்.
திமுகவை கடுமையாகத் தாக்கிய அவர், ஆளுங்கட்சி தேர்தல் வாக்குறுதிகளை தவறவிட்டதாகவும், மேலும் அதிமுக அரசு அறிமுகப்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்திவிட்டதாகவும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”