ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம் : ரஜினி குறித்து கனிமொழி கருத்து

டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்த திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி அவர்களிடம், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், ’ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ என்று பதிலளித்தார்.

மேலும் அவரிடம், ’கலைஞரின் வைர விழா நிகழ்ச்சியில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்வார்களா?’ என்று கேட்ட கேள்விக்கு, ’சோனியாவின் உடல் நலக்குறைவால் அவர் வருவதில் சந்தேகம். அவர் வர முடியாதபட்சத்தில் ராகுல் மற்றும் அகில இந்திய தலைவர்கள் வருவது குறித்து ஓரிருநாளில் உறுதி செய்யப்படும்’ என்றார், கனிமொழி.

×Close
×Close