ஜீவா-வின் "சங்கிலி புங்கிலி கதவ தொற"க்கிறது 19-ம் தேதி...

அட்லீயின் சொந்த பட நிறுவனமான 'ஏ ஃபார் ஆப்பிள்' தயாரிக்கும் முதல் படம் " சங்கிலி புங்கிலி கதவ தொற"

அட்லீயின் சொந்த பட நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனமானது, பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து “சங்கிலி புங்கிலி கதவ தொற ” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஐக் இயக்கியுள்ளார்.

படத்தில் கதாநாயகனாக வரும் ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். இவர்களுடன் ராதா ரவி ,ராதிகா சரத்குமார் ,சூரி ,கோவை சரளா ,தம்பி ராமையா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். விஷால் சந்திரா சேகர் இசையமைத்துள்ளார்.

இது தொடர்பாக பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி விஜய் சிங் கூறும்போது: ” சங்கிலி புங்கிலி கதவ தொற” கோடைகால விடுமுறையை கொண்டாடும் விதமாக இருக்கும். திறமையான நட்சத்திரங்கள் ,திறமையான இளம் இயக்குனர், வெற்றி இயக்குனர் அட்லீயின் மேற்பார்வை என்று “சங்கிலி புங்கிலி கதவ தொற” ஒரு உத்ரவாதமுள்ள வெற்றி படமாக என் கண்ணுக்கு தெரிகிறது என்றார்.

தயாரிப்பாளர் அட்லீ கூறும்போது: ” சங்கிலி புங்கிலி கதவ தொற வருகின்ற 19-ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பு உற்றகாமூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த படத்துக்கான வாழ்த்துக்கள் அனைத்தும் இளம் இயக்குனர் ஐக்கையே சாரும். ஜீவா தனக்கே உரிய பாணியில் அருமையாக நடித்திருக்கிறார். என்னுடைய நிறுவனத்தின் முதல் படமான ” சங்கிலி புங்கிலி கதவ தொற” திரைப்படத்தை ரசிகர்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close