நடிகர்களுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுக்கு எதிரான அவதூறு வழக்கை  ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் சார்பில் கண்டன கூட்டம் நடத்தபட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர், நடிகைகள் செய்தியாளர்களை அவதூறாக பேசிய புகார் எழுந்தது. அவதூறாக பேசியதாக நடிகர் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், விஜயகுமார், இயக்குனர் சேரன், அருண் விஜய் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் மீது நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ரொசாரியோ மரிய சூசை என்பவர் நீலகிரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே இந்த வழக்கில் நடிகர்கள் நேரில் ஆஜராகாததால் உதகை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால், அந்த பிடிவாரண்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்து அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக் கால தடை விதித்து உத்திக்கபட்டு இருந்தது.

இந்நிலையில் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர்கள் சூர்ய, சத்யராஜ், உள்ளிட்ட 8  பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நடிகர்கள் மீதான கூடலூர் நீதிமன்றத்தில் உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close