மருத்துவ மாணவர் சேர்க்கை எப்போது? சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

முதுகலை மருத்துவ மேற்படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இந்த வாரத்தில் தொடங்கும்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது. அந்த சட்ட மசோதாவின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு பதில் கொடுத்தவுடன் 2017-18ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படும்.

முதுகலை மருத்துவ மேற்படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இந்த வாரத்தில் தொடங்கும் என தலைமை செயலகத்தில் கொசு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

×Close
×Close