scorecardresearch

காலியாகும் கமலாலயம்.. பா.ஜ.க. ஐ.டி., அணி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து 10 மாவட்ட செயலாளர்கள் இன்று கூண்டோடு விலகியுள்ளனர்.

10 BJP district secretaries in Tamil Nadu resign
தமிழ்நாட்டில் பாஜக மாவட்ட செயலாளர்கள் 10 பேர் ராஜினாமா

பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ஒரத்தி. அன்பரசு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், “கட்சியில் சில காலமாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுவந்த நிலையில், சிலருக்கு விளக்கம் அ ளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கட்சியில் பயணித்துள்ளேன். ஆனால் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் பொறுப்பு வழங்கப்பட்டது. இத்தனை ஆண்டுக்காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு எதிர்கொண்டேன் என்பதை எண்ணிப் பார்க்கையில் வியப்பாக உள்ளது.

தொடர்ந்து அவர் சிடிஆர் நிர்மல் குமாருடன் இணைந்து பயணிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். தி.மு.க.வில் இணைய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தில் மாவட்ட செயலாளர்கள் விக்னேஷ், ஆடலரசு கோபி, பழனி நாதன், செங்குட்டுராஜன், புருஷோத்தமன், லோகேஷ், பிரவீன் குமார், ராகேஷ், சூர்யா, பிரித்திக் ராஜ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 10 bjp district secretaries in tamil nadu resign

Best of Express