Advertisment

பட்டன் செல்லை விழுங்கிய 10-வயது சிறுவன்... உணவுக் குழாயில் சிக்கிய “பட்டன் செல்லை“ அகற்றிய டாக்டர்ஸ்!

சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கியிருந்த பட்டன் செல்லை அகற்றிய சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
food pipe,button cell, Stanly hospital chennai,

10-வயது சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கியிருந்த பட்டன் செல்லை அகற்றி, அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள். நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மதியழகன் என்பரின் மகன் தருண். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருண் பட்டன் செல்லை விழுங்கிவிட்டான். அந்த பட்டன் செல்லானது தருணின் உணவுக் குழாயில் சிக்கியதனால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ரேடியோவில் இருந்து கழற்றப்பட்ட பட்டன் செல்லை, தருண் விழுங்விட்டதாக அவரது தந்தை மதியழகன் தெரிவித்தார்.  பட்டன் செல்லை விழுங்கிய தருணுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தருணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதன் பின்னர், உயர்தர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisment

இது தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர் கூறும்போது: சென்னை எழும்பூரில் உள்ள “இன்ஸ்டிடூட் ஆஃப் சைல்டு ஹெல்த்”-ல் இருந்து கடந்த சனிக்கிழமை எங்களுக்கு அழைப்பு வந்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த தருண் என்ற 10-வயது சிறுவன், லித்தியம் பட்டன் செல்லை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விழுங்விட்டான் என்றும், அது சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கியிருப்பதாக எங்களிடம் கூறினர்.

இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் உணவுக்குழாயில் இருந்த பட்டன் செல்லை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அதோடு, லித்தியம் என்பது வேதிப்பொருள் என்பதால் அதனால் பாதிப்படைந்த சில பகுதிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். பொதுவாக லித்தியம் என்பது ஆபத்தன ஒன்று. பெரும்பாலான சமயத்தில் குழந்தைகள் விழுங்கியது என்ன என்பதனை கண்டுபிடிக்க எக்ஸ்-ரே ஒன்றே வழியாக இருந்து வரும் நிலையில், நல்ல வேலையாக தருண் விஷயத்தில், அவவே பட்டன் செல்லை விழுங்கியது குறித்து கூறிவிட்டான். இதனால், மருத்துவர்களுக்கு சற்று கடினம் குறைந்தது.

பேட்டரி உடலுக்குள் இருப்பது என்பது மிக ஆபத்தானது. அவை உடலில் உள்ள திசுக்களை அரிக்கும் தன்மையை கொண்டிருக்கும். ஒருவேளை தாமதம் ஆகும்பட்சத்தில், உணவுக் குழாயில் ஓட்டை விழுந்திருக்கவும் சாத்தியம் உள்ளது. அப்படி உணவுக் குழாயில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், நிலைமை கடினமாக இருந்திருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பட்டன் செல் போன்ற ஆபத்தான பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், இவ்வாறு ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக குழந்தைகளுக்கு முதலுதவி அளிக்க வேண்டியது மிக அவசியமானது. இது போன்ற சம்பங்களில், உடலில் இருந்து பொருட்களை சீக்கிறம் அகற்றுதலே, அவற்றின் பாதிப்பில் இருந்து தப்பிக்கக்கூடிய வழியாகும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment