காலை 11 மணிக்குள்ளேயே தெறிக்கவிட்ட வெயில்!

தமிழகத்தில் என்றும் இல்லாத வகையில்.......

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கத்தரி வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் என்றும் இல்லாத வகையில் நேற்று(மே, 17) திருத்தணியில் 115 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது. இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் வெப்பம் சுட்டெரித்தது. காலை 11 மணிக்குள்ளாகவே 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. வேலூரில் 110 டிகிரி, கடலூரில் 107 டிகிரி, கரூர்- பரமத்தி வேலூரில் 107 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 108 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

×Close
×Close