காதல் விவகாரத்தை மறைக்க ஆசிரியர் மீதே பாலியல் புகார் கொடுத்த மாணவி!

மாணவியை அழைத்து படிக்கும் வயதில் காதல் வேண்டாம்

தனது காதல் விவகாரத்தை ஆசிரியர் வீட்டில் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில்,  10 ஆம் வகுப்பு மாணவி ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்து அவரை சிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஓமலூரில் செயல்பட்டு வரும் தனியார் டூடோரியல் கல்லூரியில் அதே பகுதியைச் சேர்ந்த   10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவர்கள் பலர்  படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், சில தினங்களுக்கு முன்பு  தனது வகுப்பிற்கு வரும் சுந்தரம் என்ற ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனது குடும்பத்தாரிடம் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த  குடும்பத்தினர் ஆத்திரத்தில் உறவினர்களுடன் சென்று  ஆசிரியர் சுந்தர் வீட்டை அடித்து நொறுக்கினர்.  ஆசிரியர் சுந்தரையும்  கண்மூடித்தனமாக அடித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கும் படி வற்புறுத்தியுள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலம் காவல் துறையினர் ஆசிரியர் சுந்தரத்தை மீட்டு, அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு ஆசிரியர் சுந்தரதிடம் நடத்தப்பட்ட   விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆசிரியர் மீது புகார் கொடுத்த 10 ஆம் வகுப்பு மாணவி , நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி கண்டதால் அங்குள்ள டூடோரியல் கல்லூரியில்  சேர்ந்துள்ளார். அந்த மாணவிக்கும் அதே பகுதியில் வசிக்கும்  இளைஞர் ஒருவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இவர்கள் இருவரையும் அடிக்கடி தனியாக பார்த்த   ஆசிரியர் சுந்தர் , மாணவியை அழைத்து படிக்கும் வயதில் காதல் வேண்டாம் என்றும், மீறினால் வீட்டில் சொல்லிவிடுவதாக  மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த மாணவி  எங்கே ஆசிரியர் தனது பெற்றோரிடம் உண்மையெல்லாம்  சொல்லிவிடுவாறோ என்ற பயத்தில் ஆசிரியர் சுந்தர் மீது வீட்டில் தவறாக கூற திட்டமிட்டுள்ளார்.

மாணவியிடம் பெற்றோர்கள் துருவி துருவி விசாரிக்க கடைசியில் மாணவி இப்படி ஒரு பொய்யை கூறியுள்ளார்.  மாணவி கூறிய இந்த பொய்யினால் ஆசிரியர் சுந்தர் இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்.  இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  தாக்குதலுக்கான ஆளான ஆசிரியர் சுந்தரம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

×Close
×Close