Advertisment

மும்பை பெண் குழந்தை ரூ4.8 லட்சத்திற்கு தமிழகத்தில் விற்பனை: 11 பேர் கைது

குழந்தை விற்பனை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் உட்பட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்

author-image
WebDesk
New Update
நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்திருந்த பக்கத்து வீட்டு பெண் கைது

11 persons arrested from Mumbai, Tamil Nadu for selling 4-month-old girl: குழந்தை விற்பனை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் உட்பட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advertisment

டிசம்பர் 27 அன்று தெற்கு மும்பையில் உள்ள கிர்காமில் இருந்து நான்கு மாத பெண் குழந்தை காணாமல் போனதை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை உட்பட மும்பை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேர் ஜனவரி 3 மற்றும் ஜனவரி 11 இடையே கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் குழந்தை இல்லாத தம்பதிக்கு கைக்குழந்தையை விற்பனையில் ஈடுபட்டவர்கள் விற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நான்கு மாத சிறுமியின் தந்தை பெயிண்டராக பணிபுரியும் இப்ராகிம் ஷேக் (32) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். "டிசம்பர் 1 ஆம் தேதி அந்த குழந்தையையும் அவரது கணவரையும் தாய் விட்டுச் சென்றுள்ளார்... அன்றிலிருந்து வீட்டு உரிமையாளர் அன்வாரி ஷேக் குழந்தையைப் பராமரித்து வருகிறார்" என்று VP சாலை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் 27 ஆம் தேதி, தடுப்பூசி போடுவதாக கூறி குழந்தையை இப்ராகிம் அழைத்துச் சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, இப்ராகிம் குழந்தையுடன் திரும்பாததால், அன்வாரி அவரிடம் விசாரித்தார்… அவர் தெளிவற்ற பதில்களைக் கொடுத்ததால், அன்வாரி ஜனவரி 3 அன்று காவல்துறையை அணுகி புகார் அளித்தார், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இப்ராகிமின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தையை தடுப்பூசி போடுவதற்கு பதிலாக, நான்கு பேருடன் இப்ராகிம் தமிழகத்திற்கு அழைத்துச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு, டிசம்பர் 29ல், சிவில் இன்ஜினியர் ஆனந்தகுமார் நாகராஜனிடம், குழந்தையை ஒப்படைத்தனர். அவரும், அவரது மனைவியும், குழந்தையை தத்தெடுக்க முயன்றனர்.

மனைவி விட்டுச் சென்றதால், குழந்தையை தனியாக பராமரிக்க முடியவில்லை என ஷேக் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும், "குழந்தையை கவனித்துக் கொள்ள முடியுமா என்று தனது நண்பரான முகமது ஷெர்கானிடம் கேட்டதாக ஷேக் கூறினார்... ஷேர்கான் மறுத்துவிட்டார், ஆனால் அவர் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறினார். பின்னர் அவர் இப்ராஹிமை லக்ஷ்மி தீபக் முர்கேஷ் என்ற பெண்ணிடம் அறிமுகப்படுத்தினார், அவருடன் அவர்கள் தமிழகத்தில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தையை விற்க திட்டம் தீட்டினார்கள்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஷேர்கான் மற்றும் லட்சுமி கைது செய்யப்பட்டனர். விசாரணையில், குழந்தை விற்பனையில் சதாம் ஷா, அம்ஜத் ஷேக் மற்றும் தாஹிரா ஷேக் ஆகிய மூன்று பேரும் பங்கு கொண்டதைக் கூறினர். பின்னர், அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சதாம் ஷா, அம்ஜத் மற்றும் தாஹிரா ஆகியோர் இப்ராஹிமுடன் தமிழகத்திற்கு வந்து குழந்தையை குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் ராஜேந்திரன், அவரது மனைவி சித்ரா, தமிழ் தங்கராஜ் மற்றும் மூர்த்தி சாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த கும்பல் குழந்தையை ரூ.4.8 லட்சத்திற்கு நாகராஜனுக்கு விற்றது.

சப்-இன்ஸ்பெக்டர்கள் திலீப் தாம்பே மற்றும் ராகுல் பாட்டீல் தலைமையிலான குழு தமிழகம் சென்று சிவில் இன்ஜினியர் உட்பட ஐந்து குற்றவாளிகளை கைது செய்தது. "ராஜேந்திரன், சித்ரா, தங்கராஜ், மூர்த்தி சாமி மற்றும் நாகராஜன் ஆகியோர் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டனர், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்… அவர்கள் கடந்த காலத்தில் எத்தனை குழந்தைகளை விற்றுள்ளனர் என்பதை நாங்கள் கண்டறிய முயற்சிக்கிறோம்," என்று அதிகாரி மேலும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment