பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்: தேர்வு பணி ஆசிரியர்களும் செல்போன் வைத்திருக்க தடை

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 7276 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8,16,359 மாணவ மாணவிகள் இந்த தேர்வுகளை  எழுதுகின்றனர்.  

இன்று தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் துவங்குகிறது. இந்த தேர்வில் பல்வேறு விதிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட்டு வருகிறது. முறைகேடுகள் ஏதுமின்றி, சிறப்பான முறையில், நேர்மையாக தேர்வுகள் நடத்த பல்வேறு விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்தித் தொகுப்பினை கீழே படித்து அறிந்து கொள்ளுங்கள்!

12 board exams

தமிழகத்தில் இன்று துவங்கும் இந்த தேர்வுகள் வருகின்ற 24ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 7276 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8,16,359 மாணவ மாணவிகள் இந்த தேர்வுகளை  எழுதுகின்றனர்.  இந்த தேர்வுகள் 3012 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. 3,74,747 மாணவர்கள், 4,41,612 மாணவிகள், 2 திருநங்கைகள் உட்பட மொத்தம் 8,35,525 பேர் எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தேர்வுகள் துவங்கி, மதியம் 1:15 மணி வரை நடைபெறும் இந்த தேர்வுகளில், வினாத்தாள்களை படிக்க 15 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

இந்த தேர்வுகளை எழுதுவதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. தேர்வு நடைபெறும் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசியர்களும் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் போது துண்டுத்தாள் வைத்திருந்தால், மற்ற மாணவர்களை பார்த்து காப்பி அடித்து எழுதினால், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடைத்தாள்கள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றை கண்டறிந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கும், ஒழுங்கீன நடவடிக்கைகளுக்கும் பள்ளி நிர்வாகம் துணை போவது கண்டறியப்படால், அப்பள்ளிக்கு வழங்கப்பட்டிருக்கும் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பள்ளி நடத்துவதற்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர்

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தேர்வுக்குழு அதிகாரிகள், மாநில கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இந்த குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர், போலீஸ் சூப்பிரண்ட், சார் ஆட்சியார், வருவாய் கோட்டாசியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் 4 ஆயிரம் பறக்கும் படையினர் மற்றும் நிலைஇயான படை உறுப்பினர்களை நியமித்துள்ளது முதன்மை கல்விக் குழு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 12 board exam starts today in tn and puducherry cellphones not allowed inside exam halls

Next Story
திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ: ராஜ்யசபா திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com