Advertisment

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட 13 எம்.எல்.ஏக்கள்!

நாளை மீதம் உள்ள 9 தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்களாக பதவி ஏற்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
13 DMK MLAs Taking oath in Tamil Nadu Secretariat

13 DMK MLAs

13 DMK MLAs : கடந்த ஏப்ரல் 18ம் தேதி மற்றும் மே 19ம் தேதி தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்பட்டன. திமுகவினர் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அதிமுகவினர் 9 தொகுதிகளில்  வெற்றி பெற்றனர்.

Advertisment

13 DMK MLAs List

பெரம்பூர், திருப்போரூர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், திருவாரூர், தஞ்சை, ஆண்டிபட்டி, பெரியகுளம், பூந்தமல்லி, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட

உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற 13 உறுப்பினர்கள் இன்று எம்.எல்.ஏக்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இன்று காலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் அறிவாலயத்தில் இருந்து தலைமைச்  செயலகம் சென்ற அவர்கள், சபாநாயகர் தனபால் அறையில் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக நிர்வாகிகள் பலர் முக ஸ்டாலினுடன் அங்கிருந்தனர்.

20 இடங்களைக் கைப்பற்றினால் ஆட்சி மாற்றம் அமையலாம் என்று எண்ணியிருந்த திமுகவிற்கு இந்த முடிவுகள் சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர்த்து 37 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளனர் திமுகவினர்.

நாளை மீதம் உள்ள 9 தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்களாக பதவி ஏற்கின்றனர். தமிழக சட்டப்பேரவை ஜூன் மாதம் இரண்டாம் வாரம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

13 DMK MLAs Taking oath in Tamil Nadu Secretariat

 

13 DMK MLAs Taking oath in Tamil Nadu Secretariat

 

13 DMK MLAs Taking oath in Tamil Nadu Secretariat

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment