ரூ.1 லட்சத்திற்கு 15 சவரன் நகை... கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கிருஸ்துதாஸ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வடபழனியில் தனியார் நடசத்திர விடுதி ஒன்றில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டி ஒரு கவர்சிகரமாண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் 3 மாதத்தில் 15 சவரன் நகை கொடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கிருஸ்துதாஸ் கூறியதை நம்பி மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் மற்றும் வடபழனியில் மணம் ஜூவல்லரியை தொடங்கினார் கிருஸ்துதாஸ்.

இதையடுத்து, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கிருஸ்துதாஸிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்தார்கள் என சொல்லப்படுகிறது. கொடுத்த காசுக்கு நகைகளை கொடுக்காத கிருஸ்துதாஸ், கடந்த ஆண்டு தனது ஜூவல்லரி கடைகளை மூடிவிட்டு தலைமறைவாவிட்டாராம்.

இது தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கமிஷ்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த கிருஸ்துதாஸ் அண்ணாநகரில் உள்ள திருமண மண்டபத்தில் இருப்பதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள், கிருஸ்துதாஸை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கிருஸ்துதாஸை கைது செய்த மதுரவாயல் போலிசார், அவரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கமிஷ்னர் அலுவலத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

×Close
×Close