Advertisment

18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை...

இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பினை வழங்க இருக்கிறார் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
18 mlas disqualification case, 18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு, டிடிவி தினகரன்

18 mlas disqualification case

Timeline of 18 mlas disqualification case : டிடிவி தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இவ்வழக்கு இது வரை கடந்து வந்த பாதை.

Advertisment

2017 பிப்ரவரி 16 :  தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். 15 நாட்களில் அரசின் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு.

2017 பிப்ரவரி 18 : அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டபேவையில் கொண்டு வரபட்டது. முதல்வர் கொண்டு  வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

2017 ஆகஸ்ட் 22 : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை எனவும் அவரை /மாற்ற கோரி டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 19 எம்.எல்.ஏ கள் தமிழக ஆளுனராக இருந்த வித்யாசாகர் ராவ்யை சந்தித்து கடிதம் அளித்தனர்.

2017 ஆகஸ்ட் 23 : தமிழக ஆளுநரை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் தமிழக சட்டமன்றத்தில் அரசை தனது பெரும்பான்மையான நிரூபிக்க உத்தரவிட கோரி மனு அளித்தார்.

2017 ஆகஸ்ட் 24 : அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் புகார் அளித்தார்.

2017 ஆகஸ்ட் 28 : அரசுக்கு எதிராக ஆளுனரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ களிடம் விளக்கம் கோரி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினர். ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு.

2017 செப்டம்பர் 05 : வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ கள் இடைக்கால விளக்கம் அளித்து சபாநாயகரிடம் கடிதம்.

விளக்கத்தில் திருப்தி இல்லை என கூறி செப்டம்பர் 07 ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக சபாநாயகர் உத்தரவு.

2017 செப்டம்பர் 07 :  வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ கள் விசாரணைக்கு நேரில் ஆஜார். கெறாடா சார்பில் ஆஜராகதால் சபாநாயகர் விசாரணை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.

2017 செப்டம்பர் 12 : தமிழக அரசு உடனடியாக பெரும்பான்மையான நிரூபிக்க கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, செப்டம்பர் 20 ஆம் தேதி வரை பெரும்பான்மையான நிரூபிக்க இடைக்கால தடை. அதுவரை குட்கா பொருள்களை சட்டமன்றத்திற்குள் எடுத்துச் சென்றதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்து உத்தரவு.

2017 செப்டம்பர் 14 : அரசு கெறாடா அளித்த புகார் மனுவை அளிக்க 19 எம்.எல்.ஏ கள் சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கை.

2017 செப்டம்பர் 16 : டி.டி.வி தினகரன் ஆதரவு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு.

2017  செப்டம்பர் 18 : அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் காலை 11 மணிக்கு உத்தரவு.

இரவு 8.30 மணிக்கு தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதில் அரசு எதிராக கடிதம் அளித்த சாக்கையன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அவருக்கு தகுதி நீக்கம் செய்யவில்லை என விளக்கம்.

2017 செப்டம்பர் 19 : தகுதி நீக்கத்தை எதிர்த்து வெற்றிவேல், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் மனு தாக்கல்.

2017 செப்டம்பர் 20 : தகுதி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்த  மனு மீது நீதிபதி துரைசாமி விசாரணை.

மறு உத்தரவு வரும் வரை தகுதி நீக்கம் செய்ய எம்.எல்.ஏ தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்கால தடை விதித்தும். தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை  பேரவைக்குள் எடுத்து சென்றதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உத்தரவு.

நீதிபதி கே.ரவிசந்திரபாபு விசாரணை மற்றும் உத்தரவு

அக்டோபர் மாதம் முதல் நீதிபதி கே.ரவிசந்திரபாபு முன்பு விசாரணை.

2017 நவம்பர் 2 : வழக்கின் முக்கியத்துவம் கருது டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி ரவிசந்திரபாபு உத்தரவு.

2017 நவம்பர் 6 : தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரணை கோரி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் முறையீடு. நவம்பர் 16 ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், முதல் அமர்வே இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிப்பு.

2017 நவம்பர் 16 : தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியது.

2018 ஜனவரி 18 : அனைத்து தரப்பும் இறுதி வாதங்களை நிறைவு செய்தனர். எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு.

மேலும் படிக்க : இன்றைய தீர்ப்பு தொடர்பான லைவ் அப்டேட்ஸ் படிக்க

2018 ஜனவரி 23 : அனைத்து தரப்பினரும் எழுத்துப் பூர்வமான இறுதி வாதங்களை தாக்கல். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு உத்தரவு.

2018 ஜூன் 14 : அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு.

2018 ஜூன் 18 : மூன்றாவது நீதிபதியாக ஆர்.விமலா விசாரிப்பார் என மூத்த நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ் பரிந்துரை.

2018 ஜூன் 22 : வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தங்க தமிழ்செல்வன் தவிர 17 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.

2018 ஜூன் 27 : வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் விசாரிப்பார் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

2018 ஜூலை 4 : மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன் தகுதி நீக்க வழக்கு விசாரணைக்கு பட்டியலிடபட்டுள்ளது. வாதங்களை ஜூலை 23 முதல் தொடங்குவதாக அறிவிப்பு.

2018 ஜூலை 23 : தகுதி நீக்க வழக்கில் 18 எம்.எல்.ஏ தரப்பில் இறுதி வாதம் தொடங்கியது.

2018 ஆகஸ்ட் 31 : வழக்கில் அனைத்து தரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கபட்டது.

(மொத்தமாக நீதிபதி எம். சத்தியநாராயணனிடம் 12 நாட்கள் அனைத்து தரப்பு இறுதி வாதங்கள் நடைபெற்றது)

2018 அக்டோபர் 25 : மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளார்.

Tamil Nadu Madras High Court Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment