18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநருக்கு சில மாதங்கள் முன்பு கடிதம் அளித்திருந்தனர். இதையடுத்து, அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதேபோன்று, அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரினர்.

இந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே வாதாடிய சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதம் செய்கிறார்.

முதல்வர் மீது குற்றச்சாட்டுகள் இருக்குன்றன என்பது உட்கட்சி விவகாரம். ஆனால் அந்த பிரச்சனை குறித்து உட்கட்சிக்குள் கேள்வியோ, பிரச்சனையோ எழுப்பவில்லை. அதற்கான ஆதாரமும் இல்லை. மேலும் முதல்வர் மீதான அதிருப்பதி விவகாரத்தை உட்கட்சியில் எழுப்பாமல் நேரடிநாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இது உள்நோக்கமானது. இந்த செயல் டி.டி.வி. தினகரன் பின்புலத்தில் அவரின் பரிந்துரையின் பேரில் தான் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அதற்கு ஆதாரமான கடிதம் தங்களிடம் உள்ளது.

உட்கட்சி விவகாரத்தை துணை பொதுச்செயலாளர் என்று தினகரன் ஆகஸ்ட் 21ம் தேதி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 22ம் தேதி 19 எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். இது கட்சி விதிகளுக்கு உட்பட்டு கொடுக்கவில்லை.” என வாதாடினார்.

×Close
×Close