பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

கணினியில் மட்டும் 3,656 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வுகளில் ரேங்கிங் முறையை ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறை நேற்று உத்தரவிட்டது. இதனால், மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் யார் யார் எனும் விவரங்கள் வெளியாகவில்லை.

தமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 89.3 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.5 சதவீதமாகவும் உள்ளது. அதிக தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கணினியில் மட்டும் 3,656 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

தேர்வு முடிவுகளை tnresults.nic.in , dge1.tn.nic.in, dge2.tn.nic.in எனும் தளங்களில் மாணவர்கள் அறியலாம்.

பாட வாரியாக செண்டம்:

வேதியியல் – 1123
இயற்பியல் – 187
வணிகவியல் – 8301
கணக்குப்பதிவியல் – 5597
கணிதம் – 3656
விலங்கியல் – 4

கடந்த வருடம் 91.4 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், இந்தாண்டு 92.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, கடந்தாண்டை விட, இந்தாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

யார் யாருக்கு என்ன கிரேடு?

1180 மதிப்பெண்களுக்கு மேல் அடுத்தவர்களுக்கு ஏ கிரேடு அளிக்கப்படுகிறது.
1151 – 1180 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி கிரேடு.
1126 – 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சி கிரேடு.
1100 – 1126 வரை பெற்றவர்களுக்கு டி கிரேடு.
1001 – 1100 வரை பெற்றவர்களுக்கு இ கிரேடு.

அதன்படி, மொத்தம் 1171 பேர் ‘ஏ’ கிரேடும், 12,283 பேர் ‘பி’ கிரேடும், 14,806 பேர் ‘சி’ கிரேடும் பெற்றுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close