முதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.

ராஜவேலுவின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்

சேலத்தில் முதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி :

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20 ஆம் தேதி சேலம் அருகே உள்ள தாரமங்கலம் சென்றார். அவரி வருகையையொட்டி அ.தி.மு.க-வினர் தாரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே முதல்வரின் கட் அவுட் உயரமாக வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

தொண்டர்கள் மணி மற்றும் ராஜவேலு ஆகியோர் உயரத்தில் ஏறி முதல்வருக்கு கட் அவுட் வைக்கும்போது அருகில் இருந்த டிரான்ஸ்ஃபாம் ஒயர் இவர்கள் மீது உரசியது. இதில் இரண்டு பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு பேருக்கும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டது.

பின்பு இருவரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜவேலு சிகிச்சை பலனின்றி இன்று (23.10.18) உயிரிழந்தார். இந்த நிலையில் ராஜவடிவேலுவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜவேலுவின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close