Advertisment

100 அடி ஆழத்தில் சுஜித்: ராட்சத எந்திரங்களுடன் இரவு பகலாக மீட்புப்பணி

Trichy Surjith Rescue operations: குழந்தையை  பத்திரமாக மீட்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy Boy Falls In Borewell Live Updates

Trichy Boy Falls In Borewell Live Updates

Tiruchi Boy Falls In Borewell Updates : திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2வயது குழந்தை சுஜித் தோட்டத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் மாலை 5.40 மணிக்கு தவறி விழுந்தான்.  கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தீயணைப்பு படைவீரர்கள் 14 மணி நேரத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த பிரத்யேக கருவி மூலம் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Advertisment

சுஜித்தின் இன்றைய மீட்பு பணிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பைத் தொடருங்கள்:

https://tamil.indianexpress.com/tamilnadu/surjith-rescue-live-updates-trichy-2-years-old-boy-slipped-into-borewell/

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் ஆகியோர் குழந்தை பத்திரமாக மீட்கப்படும் என்றும்  குழந்தையை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் விரைகிறது.

Live Blog

Surjit Rescue operation updates :  சுஜித் வில்சன் மீட்கும் பணி தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கே காணலாம்.



























Highlights

    22:24 (IST)26 Oct 2019

    இதோ சுர்ஜித் கைகள்

    100 அடி ஆழத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தை சுர்ஜித்தின் கை வெளியே தெரியும் படம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    22:09 (IST)26 Oct 2019

    தற்காலிகமாக மீட்பு பணிகள் நிறுத்தம்

    குழந்தையின் கைகள் வெளியே தெரிந்ததைத் தொடர்ந்து, ஏர் லாக் மூலம் அதன் கைகள் இறுக பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தை இருக்கும் இடத்தில் மண்சரிவுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக மீட்பு பணிகள் நிறுத்தம்.

    22:05 (IST)26 Oct 2019

    நாகையில் பிரார்த்திக்கும் மாணவர்கள்

    நாகை மாவட்டத்தில், 200 மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, சுர்ஜித் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    22:02 (IST)26 Oct 2019

    ராட்சத இயந்திரம் விரைவு

    ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டுவதற்கான ராட்சத இயந்திரம் சிறிது நேரத்தில் நடுக்காட்டுப்பட்டியை வந்தடையும் என தகவல்

    22:01 (IST)26 Oct 2019

    ஏர் லாக் மூலம் பிடிக்கப்பட்ட கைகள்

    குழந்தையின் கைகள் வெளியே தெரிந்ததைத் தொடர்ந்து, ஏர் லாக் மூலம் அதன் கைகள் இறுக பிடிக்கப்பட்டுள்ளது. 100 அடிக்கும் மேற்கொண்டு குழந்தை சென்றுவிடாமல் இருக்க ஏர் லாக் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

    21:31 (IST)26 Oct 2019

    போர்வெல் சாதனம் எப்போது வரும்?

    திருச்சியில் இருந்து போர்வெல் சாதனம் நடுக்காட்டுப்பட்டி கிராமம் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால், மீட்புப் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், குழி மூடப்பட்டு, மீட்புக் குழுவினர் சற்று ஓய்வு எடுத்து வருகின்றனர். போர்வெல் சாதனம் வந்த பிறகு, 100 அடி ஆழத்திற்கு குழி ஏற்படுத்த வேண்டும். அதற்கு கிட்டத்தட்ட நான்கரை மணி நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    21:25 (IST)26 Oct 2019

    குழந்தையை மீட்க முடியாதது வருத்தமளிக்கிறது - திருநாவுக்கரசர் எம்.பி

    ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை

    26 மணி நேரங்களைக் கடந்தும் குழந்தையை மீட்க முடியாதது வருத்தமளிக்கிறது

    திருநாவுக்கரசர் எம்.பி

    21:18 (IST)26 Oct 2019

    மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் மழை

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில், மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது

    21:15 (IST)26 Oct 2019

    சுர்ஜித்தின் கை வெளியே தெரியும் பதிவு

    ஆழ்துளை கிணற்றில் சுமார் 100 அடி ஆழத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தை சுர்ஜித்தின் கை வெளியே தெரியும் கண்காணிப்பு கேமரா பதிவு வெளியாகியுள்ளது

    மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை

    20:26 (IST)26 Oct 2019

    கிணறுகளை 2 நாட்களுக்குள் மூடாவிட்டால், குற்றவியல் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகளை 2 நாட்களுக்குள் மூடாவிட்டால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை மூடாமல் இருந்தால், அந்த இடத்தை அரசு கையகப்படுத்தும் - ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை

    19:41 (IST)26 Oct 2019

    முதல் வரியை குழந்தைகளுக்காக எழுத வேண்டும் - லதா ரஜினிகாந்த்

    குழந்தைகள் பாதுகாப்புக்காக தேசிய அளவில் ஒரு அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும்; குழந்தைகளுக்காக மாநில அரசுகளும் தனிக்குழுவை அமைக்க வேண்டும்

    எந்தச் சட்டத்தை கொண்டுவந்தாலும் அதன் முதல் வரியை குழந்தைகளுக்காக எழுத வேண்டும் - லதா ரஜினிகாந்த்

    19:40 (IST)26 Oct 2019

    இறைவனை வேண்டுவோம் - தமிழிசை

    சுர்ஜித் ஆரோக்கியமாக மீட்கப்பட இறைவனை வேண்டுவோம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    19:31 (IST)26 Oct 2019

    தீயணைப்பு வீரர்கள் தயார்

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க தீயணைப்பு வீரர்கள் கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய 3 பேர் என்எல்சியின் சுரங்கம் தோண்டும் கருவி மூலம் தோண்டப்படும் புதிய குழியில் இறங்க தயாராக உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

    19:00 (IST)26 Oct 2019

    புதுச்சேரியில் திறந்த நிலையிலுள்ள ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு

    புதுச்சேரியில், ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் பராமரிப்பின்றி திறந்த நிலையில் இருந்தால், அவற்றை கண்டறிந்து மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித், பத்திரமாக மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

    18:49 (IST)26 Oct 2019

    சுர்ஜித்தை மீட்க தீயணைப்பு வீரர்கள் 3 பேர் தயார்

    என்எல்சியின் சுரங்கம் தோண்டும் கருவி மூலம் குழி தோண்டி குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

    தோண்டப்படும் புதிய குழியில் இறங்கி குழந்தை சுர்ஜித்தை மீட்க தீயணைப்பு வீரர்கள் 3 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

    18:48 (IST)26 Oct 2019

    24 மணி நேரமாக பிரார்த்திக்கும் நெஞ்சங்கள்

    நேற்று 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான், குழந்தை சுர்ஜித்

    கடந்த 24 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுர்ஜித் பரிதவிப்பு

    இன்னும் பலன் கொடுக்காத 24 மணி நேர மீட்பு பணி

    சுர்ஜித்தின் வரவுக்காக 24 மணி நேரமாக பிரார்த்திக்கும் நெஞ்சங்கள்

    18:24 (IST)26 Oct 2019

    இது தான் இறுதி முடிவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது அளித்த பேட்டியில், "குழந்தை விழுந்த குழயிலிருந்து மூன்று மீட்டர் தொலைவில், 80 அடி ஆழத்திற்கு மற்றொரு குழி தோண்டப்படும். அதில் இரு வீரர்கள் அனுப்பப்பட உள்ளார்கள். பிறகு, 80 அடி ஆழத்தில் பக்கவாட்டில் மற்றொரு குழி தோண்டி, குழந்தை மீட்கப்பட உள்ளான். இது தான் எங்களது இறுதி முடிவு" என்று தெரிவித்துள்ளார். 

    என்எல்சி, ஓஎன்ஜிசி, தீயணைப்புத்துறை இணைந்து 1  மீ. அகலத்திற்கு 90 அடிக்கு குழி தோண்ட உள்ளதாகவும் கூறியுள்ளார்

    17:59 (IST)26 Oct 2019

    85 அடி ஆழத்தில் சுர்ஜித்

    குழி தோண்டி மனித சக்தி மூலமாக குழந்தையை மீட்க நான்கு மணி நேரமாகும் என தீயணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன் தெரிவித்துள்ளார். 

    தவிர, குழந்தை 80 அடி ஆழத்திலிருந்து 85 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது

    17:46 (IST)26 Oct 2019

    கண்ணீர் வற்றிய சுர்ஜித் பெற்றோர்

    24 மணி நேரத்தை கடந்தும் மீட்புப் பணி தொடர்வதால், குழந்தையின் பெற்றோர், உறவினர், பொது மக்கள் கவலை அடைந்துள்ளனர். நேரம் ஆக ஆக குழந்தை சுர்ஜித் பெற்றோர் கதறி அழுவது அங்கிருப்பவர்களை பெரும் துக்கத்திற்கு ஆழத்தியுள்ளது.

    17:43 (IST)26 Oct 2019

    ஆழ்துளைக் கிணறுகளை மூட ஆட்சியர் உத்தரவு

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பயன்படாத, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட அதிகாரிகளுக்கு, ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    17:29 (IST)26 Oct 2019

    போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுரங்கம் போன்ற குழி

    குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு அருகே என்எல்சி, தனியார் அமைப்பு இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுரங்கம் போன்ற குழி தோண்டி மீட்க முடிவு

    17:28 (IST)26 Oct 2019

    குழந்தை மீட்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் - லதா ரஜினிகாந்த்

    குழந்தை எப்போது மீட்கப்படும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

    ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - லதா ரஜினிகாந்த்

    16:52 (IST)26 Oct 2019

    முடிவுக்கு வரும் சுர்ஜித் மீட்பு?

    சற்றுமுன் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், "குழந்தை குழிக்குள் விழுந்து 24 மணி நேரம் ஆகப் போகிறது. அதன் பிறகு, குழிக்கு அருகே, 80 அடி ஆழத்தில் மற்றொரு குழி உருவாக்கி, அங்கிருந்து குழந்தை விழுந்த பள்ளத்தை நோக்கி மற்றொரு பாதை உருவாக்கப்பட்டு, கிட்டத்தட்ட 'ப' வடிவத்தில் வழி ஏற்படுத்தி, அதில் பயிற்சி பெற்ற வீரர் அனுப்பப்பட்டு குழந்தை மீட்கப்பட உள்ளார். 

    இதுவே நமது கடைசி முயற்சியாகும் என்று தெரிவித்துள்ளார்.

    16:40 (IST)26 Oct 2019

    80 அடிக்கு புதிய குழி தோண்டும் என்எல்சி

    ஒரி தனியார் நிறுவனம் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் குழந்தையை மீட்க முயன்று வரும் நிலையில், என்எல்சி வேறு ஒரு முடிவை எடுத்துள்ளது. குழிக்கு பக்கவாட்டில், 80 அடி ஆழத்தில் புதிதாக குழி தோண்டி, குழந்தையை மீட்க என்எல்சி முடிவு எடுத்துள்ளது. 

    16:29 (IST)26 Oct 2019

    தீயணைப்பு டிஜிபி நேரில் ஆய்வு

    திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியை தீயணைப்புப் படை டிஜிபி காந்திராஜன் நேரில் ஆய்வு செய்து வருகிறார். 

    16:25 (IST)26 Oct 2019

    22 மணி நேரத்திற்கும் மேலாக....

    திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. தேசிய மீட்புப் பேரிடர் மீட்புப் படையினர், குழந்தையை மீட்கும் பனியின் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். 

    15:36 (IST)26 Oct 2019

    செயல்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படவேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

    70 அடி ஆழத்தில் இருக்கும் சுர்ஜித்தின்  மனநிலை தற்போது எவ்வாறு இருக்கும் என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கின்றது என்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டில் பதிவு செய்துள்ளார்.  மேலும், செயல்படமால் இருக்கும் அனைத்து ஆழ்துளை கிணறுகளும் மூடப்படவேண்டும், இதில் அரசங்கம் எடுக்கும் முயற்சிகளோடு நாமும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.          

    15:26 (IST)26 Oct 2019

    கரூர் எம்.பி ஜோதிமணி நேரில் ஆறுதல்

    திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுர்ஜித்தின் பெற்ற்றோரை கரூர் எம்.பி ஜோதிமணி நேரில் சந்தித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மீட்டுக்கொடுங்கள் என்று பெற்றோர் கூறும்போது மனம் கலங்குகின்றது என்றும், நிலவுக்கு விண்கலம் அனுப்பும் தொழில்நுட்ப நாடாக இருந்தும்,  குழந்தையில் மீட்பதில் போராட்டம் காண்பது மனவேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு தேவைப்படும் அறிவியல், பேரிடருக்கு (குறிப்பாக இந்த ஆழ்துளை போன்ற சம்பவங்கள் ) தேவைப்படும் தொழில்நுட்பங்களை பிரத்தியோகமாக உருவாக்க பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.       

          

    15:26 (IST)26 Oct 2019

    கரூர் எம்.பி ஜோதிமணி நேரில் ஆறுதல்

    திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுர்ஜித்தின் பெற்ற்றோரை கரூர் எம்.பி ஜோதிமணி நேரில் சந்தித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மீட்டுக்கொடுங்கள் என்று பெற்றோர் கூறும்போது மனம் கலங்குகின்றது என்றும், நிலவுக்கு விண்கலம் அனுப்பும் தொழில்நுட்ப நாடாக இருந்தும்,  குழந்தையில் மீட்பதில் போராட்டம் காண்பது மனவேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு தேவைப்படும் அறிவியல், பேரிடருக்கு (குறிப்பாக இந்த ஆழ்துளை போன்ற சம்பவங்கள் ) தேவைப்படும் தொழில்நுட்பங்களை பிரத்தியோகமாக உருவாக்க பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.       

          

    13:40 (IST)26 Oct 2019

    மக்களின் பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கும் - பொன்.ராதா கிருஷ்ணன்

    லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனையின் பலனாக குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப் படுவான் என்று பாஜக கட்சியின் மூத்தத் தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

    13:27 (IST)26 Oct 2019

    சுர்ஜித்தை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை குழு விரைந்தது -

    இரண்டு வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை குழு தற்போது  திருச்சி நடுக்காட்டுப்பட்டியை வந்தடைந்துள்ளனர். சில நேரங்களுக்கு முன்பாக பிரேம் ஆனந்த் தலைமையில் செயல்படும்  மாநில பேரிடர் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு வந்து பணிகளைத் துரித படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    12:23 (IST)26 Oct 2019

    நாகூர் தர்காவில் சுர்ஜித்துகாக பாதுகாப்பு :

    70 அடி ஆழ்துளை கிணற்றில் போராடி வரும் சுர்ஜித்துக்காக  நாகூர் தர்காவில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. நாகூர் ஆண்டவர் சன்னயில் கூட்டமாக மக்கள் பிரார்த்தனை 

    12:19 (IST)26 Oct 2019

    நடுகாட்டுபட்டியில் லேசான மழை - மீட்கும் பணி மும்முரம்

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்கும் பணி 17 மணி நேரத்தை கடந்து நீடித்து வரும் நிலையில் திருச்சி நடுகாட்டுபட்டியில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால், மீட்கும் பணிக்கு பெரிய தடை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

    12:12 (IST)26 Oct 2019

    என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது - ராதா கிருஷ்ணன் விளக்கம்

    நேற்று இரவு எதிரப்பராத சூழ்நிலையில் குழந்தை 30 அடியில் இருந்த குழந்தை 70 அடி  ஆழத்திற்கு சென்றது.  மீட்புக் குழு, மருத்துவக் குழு எல்லாம் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். குழந்தைக்கு ஆக்சிஜன் தொடர்ச்சியாக கொடுத்து வருகிறோம். ஆனால், குழந்தைக்குத் தேவைப்படும்  ஊட்டச்சத்து தான் கவலை அளித்து வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் , மாநில பேரிடர் ஆணையம், நெய்வேலி சுரங்க பாதை மீட்புக் குழு, போன்றவைகளின்  உதவிகளையும் கோரியுள்ளோம். ஏன் ..... மெட்ரோ ரயிலின் நிபுணர்களின்  கருத்துகளையும் கேட்டு இருக்கிறோம்  . ஆழ்துளை கிணற்றுக்கான நெறிமுறைகள்  இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட  தமிழகத்தில் சிறந்து இருக்கிறது, துருதஷ்டவசமாக சுர்ஜித்தின் விசயத்தில் எந்த நெறிமுறைகளையும் கடைபிடிக்க வில்லை. இருந்தாலும், தற்போது யாரையும் குறை சொல்வதை விட்டுவிட்டு, இதை ஒரு பேரிடராகத் தான் பார்க்கிறோம் என்று  வருவாய் நிர்வாகம் இயக்குனர்  மற்றும் பேரிடர் மேலாண்மை கமிஷனர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   

    11:59 (IST)26 Oct 2019

    பெரிடக் குழுவுக்கு உதவும் சுர்ஜித்தின் தாய்

    சுர்ஜித்தை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மீட்புக் குழு கேட்டுகொண்டதன் பேரில் சுர்ஜித்தின் தாய் தன் வீட்டில் இருக்கும் தையல் மெசின் மூலம் துணிப்பையை தைத்து கொடுக்கின்றார். இந்த சின்ன துணிப்பை தன் மகனை வீட்டிற்கு கொண்டு வர ஒரு துடுப்பாய் இருக்கும்   என்ற நம்பிக்கையில் சுர்ஜித்தின் தாய்.      

    11:53 (IST)26 Oct 2019

    சுர்ஜித்தை மீட்டாக வேண்டும் - ஸ்டாலின்

    ஆழ்துளை கிணற்றுக்குள் 17 மணி நேரமாக போராடும் சுர்ஜித்தை நினைத்து நம் அனைவரின் மனமும் கனக்கிறது , அரசு இயந்திரத்தை முழுமையாக செயல்படுத்தி குழந்தை சுர்ஜித் மீட்கப்பட  வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபோன்ற, சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதை தவிர்க்க உறுதி செய்ய   வேண்டும் என்றும் ட்விட்டரில் ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.        

    11:41 (IST)26 Oct 2019

    என்.எல்.சி சுரங்க மீட்புக் குழு நவீனக் கருவிகளுடன் விரைந்தது

    ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் மீட்க என்.எல்.சி சுரங்க மீட்புக் குழு நவீனக் கருவிகளுடன் விரைந்தது.  சிறுவன்  ஆழ்துளை  கிணற்றுக்குள்  இருந்து மீட்கும் பணி 17 மணி நேரத்தை தாண்டி செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    11:12 (IST)26 Oct 2019

    குழந்தையை மீட்கும் பணியில் மும்முரம்

    ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் மீட்க அனைத்து நவீன கருவிகளும், மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. மீட்கும் மணி  தொடர்ந்து 16 மணி நேரமாக நடந்து வருகிறது. ஒட்டு மொத்த தமிழகமும்,  ஒரு சின்ன பச்சிளம்  உயிருக்காக பிரார்த்தனை செய்து வருகிறது.       

    10:01 (IST)26 Oct 2019

    சுர்ஜித் மீண்டு வர வேண்டும் - நடிகர் விவேக்.

    திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் மீண்டும் வர வேண்டும் என்று நடிகர் விவேக் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.  

    09:23 (IST)26 Oct 2019

    பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு :

    வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து  கைவிடப்பட்ட, பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.  

    09:14 (IST)26 Oct 2019

    சுர்ஜித்தின் பேச்சை தற்போது கேட்க முடியவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

    இந்த நிமிடம் வரை சுர்ஜித்துக்கு ஆக்சிஜன் கொடுத்து வருவதாகவும், இருந்தாலும் 70 அடி  ஆழம் சென்றுவிட்டதால் சுர்ஜித்தின் பேச்சு சத்தத்தையும், அழுகுரல் சத்தத்தையும் கேட்க முடியவில்லை என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.     

    08:17 (IST)26 Oct 2019

    சுர்ஜித்துக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாக மருத்துவர் தகவல்:

    குழந்தை சுர்ஜித்துக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர் ஸ்ரீதர் சற்று முன்பு தெரிவித்துள்ளார்.  

    08:13 (IST)26 Oct 2019

    அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் கருத்து :

    ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க பு​​திய இயந்திரங்களை கண்டுபிடிக்க நாம் ஏன்  கவனம் செலுத்த வில்லை என்ற கேள்வியை அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார்  முன்வைத்துள்ளார். ராக்கெட்டுகள் மேல் இருக்கும் கவனம், சாதாரண மக்களுக்கும் பயன்படும் விஞ்ஞானத்திலும் இருக்க வேண்டும் என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  

    08:08 (IST)26 Oct 2019

    அமைச்சர் விஜய பாஸ்கர் நம்பிக்கை :

    திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 14 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. மீட்கும் பணி அனைத்து வகையிலும்  துரிதப்படுத்தப் பட்டுள்ளது,எனவே குழந்தையை விரைவில் மீட்போம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

     

    Surjit Rescue operation updates : மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2வயது குழந்தையை மீட்க தீயணைப்பு படைவீரர்கள் 11 மணிநேரத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

    70அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி தீவிரப்படுத்த அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.  குழந்தையை  பத்திரமாக மீட்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment