Advertisment

தமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே

DMK allaince leading with 158 to 166 seats CVoter Survey :

author-image
WebDesk
New Update
News Highlights: அதிமுக அரசு மீது 2-வது ஊழல் பட்டியலை ஆளுநரிடம் சமர்பித்த திமுக

நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலின் முதலாவது கருத்துக்கணிப்பு முடிவினை ஏபிபி சி-வோட்டர் நிறுவனம் வெளியிட்டது.

Advertisment

தமிழகத்தில் திமுக அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு கூட்டணி 41.1% வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில், அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வெறும் 28.7% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்றக் கட்சிகள் 15.7% வாக்குகளுடன் (0 முதல் 4 இடங்கள்) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

 

publive-image

சட்டமன்றத் தொகுதிகள்: 

திமுக கூட்டணி: 158 முதல் 166 தொகுதிகள் வரை கைப்பற்றக்கூடும்;

அதிமுக கூட்டணி:  60 முதல் 68 தொகுதிகள் வரை கைபற்றக்கூடும்;

மற்றக் கட்சிகள்: அதிகபட்சம் 4 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும்.

அதிமுக வாக்குகள்: 

2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகளை விட வரும் சட்டமன்றத் தேர்தலில் 15% வாக்குகள் குறைவாக பெறும் என கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது. அதாவது, 43.7 சதவீதத்தில் இருந்து 28.7 சதவீதமாக அதன் வாக்குகள் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினகரன் தலைமயிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கமல் ஹாசன் தலைமயிலான மக்கள் நீதி மய்யம் ஆகிய இரண்டு கட்சிகள் முறையே 6.7%, 7.8% என மொத்தம் 14.5% வாக்குகளை பெறும் என  கணக்கிடப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், திமுக கூட்டணி 2016 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை ( 39.4) விட வெறும் 1.7 சதவீத வாக்குகளை மட்டும் அதிகமாக பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், சட்டப்பேரவை இடங்களைப் பொறுத்தவரையில் 166 தொகுதிகள் வரை திமுக கூட்டணி கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதிமுக கூட்டணிக்கு எதிரான தேர்தல் வாக்குகளை திமுக கூட்டணியை விட கமல் ஹாசனும், தினகரனும் நல்ல முறையில் கைப்பற்றியது தெரியவருகிறது. இருப்பினும், இந்த இரண்டு கட்சிகளும் மொத்தமாக 10 (கமல்ஹாசன் - 4, தினகரன் - 6) சட்டமன்றத் தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Dmk Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment