Advertisment

திருச்சி: 3000 அடி மலை உச்சியில் இருந்து கீழே விழுந்த இளைஞரின் உடல் மீட்பு!

திருச்சி தலைமலையில் உள்ள 3000 அடி உயர மலையில் இருந்து கீழே விழுந்த இளைஞரின் உடல் இன்று மீட்கப்பட்டது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy, Temple, youth fell down vally, thalaimalai,

திருச்சி தலைமலையில் உள்ள 3000 அடி உயர மலையில் இருந்து கீழே விழுந்த இளைஞரின் உடல் இன்று மீட்கப்பட்டது.

Advertisment

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள தலைமலை என்ற இடத்தில் புகழ்பெற்ற பெருமாள் ஆலயம் உள்ளது. கடைசி புரட்டாசி சனிக்கிழமை என்பதால் திரளான பக்தர்கள் நேற்று அங்கு வழிபாடு மேற்கொண்டிருந்தனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்திலிருக்கும் இந்த மலையினைச் சுற்றிலும் பக்தர்கள், இரண்டடி இடைவெளி கொண்ட கோயில் சுவற்றைப் பிடித்தவாறு நடந்து சென்று கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்த ஆபத்தான இந்த பிரகாரத்தை சுற்றும்போது சற்று அசந்தாலும், 3000 அடிக்கும் மேல் உள்ள பள்ளத்தில் விழ வேண்டியதுதான். எனினும், இதைப் பற்றி கவலைப்படாத பக்தர்கள், எந்தவித இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனிடையே நேற்று, அந்த கோவிலில் கிரிவலம் மேற்கொண்ட இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

https://www.youtube.com/embed/a_WMFLFk9Ko

மூன்றாவது முறையாக வலம் வரும்போது அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த தொடர்பான காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. கீழே விழுந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியாத நிலையில், தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் அந்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், கோவில் பிரகாரத்தில் இருந்து கீழே விழுந்த அந்த இளைஞர், திருச்சி மாவட்டம் முசிரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் என தெரியவந்தது. மேலும், வனத்துறையினர், போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் பொதுமக்களின் உதவியை நாடினர். இந்த நிலையில் இன்று காலை அவரது உடல் மலையடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment