துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி: சேப்பாக்கம் கெஸ்ட் ஹவுசில் பரபரப்பு

24 years old cop shoots self to suicide at Chepauk guest house Tamil News இருப்பினும் தற்கொலை முயற்சிக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.

24 years old cop shoots self to suicide at Chepauk guest house Tamil News
24 years old cop shoots self to suicide at Chepauk guest house Tamil News

24 years old cop shoots self to suicide at Chepauk guest house Tamil News : சென்னை சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை பாதுகாப்புப் பணியிலிருந்த ஆயுதப்படை காவலர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், ஜரூர் வட்டத்தைச் சேர்ந்த 24 வயதான வேலுச்சாமி, சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். சமீப காலமாக கலைவானர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், எம்எல்ஏக்கள் பலர், வாலாஜா சாலையில் உள்ள சேப்பாக்கம் விருந்தினர் மாளியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த விருந்தினர் மாளிகையில் காவலர் வேலுச்சாமிக்கு பாதுகாப்புப்பணி வழங்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.15 மணியளவில், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வேலுசாமி தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு ஓடி வந்த சக காவலர்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வேலுச்சாமியை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வேலுசாமியின் கன்னம் வழியாகத் தோட்டா நுழைந்ததால், இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் தற்கொலை முயற்சிக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“அதிர்ஷ்டவசமாக, அவர் துப்பாக்கியை நேராக வைத்திருக்காததால், தோட்டா காது பக்கத்தின் வழியாக வெளியேறியது. அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். ஆனால், மருத்துவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள்” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 24 years old cop shoots self to suicide at chepauk guest house tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com