கோவை பி.ஆர்.எஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் போலியாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி செய்து ஏமாற்றி கார்களை பறித்த சம்பவத்தில் மீட்கப்பட்ட 19 கார்களுடன் அது சம்பந்தமான விளக்கத்தையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “ 2019 ஆம் ஆண்டு கவுண்டம்பாளையம் பகுதியில் வீ ஜிஎம் டிராவல்ஸ் என்ற நிறுவனம் போலியாக துவங்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தினர் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கிறோம் எங்களுக்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் போன்றவற்றிற்கு வாடகைக்கு விடுவதற்கு கார் தேவைப்படுகிறது என்று கூறி 30″க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து கார்களை ஏமாற்றி பெற்று சில காலம் மாதாமாதம் தொகையும் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, பணத்தை அனுப்புவதை நிறுத்திவிட்டு அந்த நிறுவனத்தையும் காலி செய்துவிட்டு தலைமறைவாகி தப்பி ஓடி விட்டனர்
அதனைத் தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வந்த சூழ்நிலையில் தற்பொழுது அவர்களிடம் இருந்து 19 கார்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மூன்று கார்கள் மீட்கப்படவுள்ளது தற்போது இந்த 11 கார்களும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இது போன்று மோசடி செய்து பெற்ற கார்களை வெங்கடேஷ் என்பவர் போலியாக புத்தகம் தயாரித்து வேறொரு நபருக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
-
மீட்கப்பட்ட கார்களுடன் எஸ்.பி.
அதுவும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு பின்புலமாக செயல்பட்டவர்கள் யார் எப்படி போலியாக rc புத்தகம் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து எல்லாம் அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.
எனவே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது போன்று மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் மீது ஈவு இரக்கம் காட்டாமல் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டால் உடனடியாக குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள்.
தங்களுடைய பணமும் வீண் போகாது. மேலும் இதுபோன்ற பல்வேறு மோசடிகளும் தொடர்ந்து கோவையில் நடைபெற்று வருகிறது எனவே பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மேலும் கோவை மாநகரில் நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்கள் தொடர்பாக நான் கருத்து கூற முடியாது. இருந்தபோதும் கோவை மாவட்டத்தில் உள்ள 13 எல்லை சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
மகாசிவராத்திரியின் போது கோவில்களில் மக்கள் அமைதியாக தரிசனம் செய்ய போதிய வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை (பிப்.14) குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி கோவை மாவட்டத்தில் உள்ள 34 சோதனைச் சாலைகள் கண்காணிப்பு பணியில் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
கஞ்சா சாக்லேட் பொறுத்தவரை வட மாநிலத்திலிருந்து தான் வருகிறது. கான்பூரில் ஒரு தொழிற்சாலையும் கண்டறியப்பட்டுள்ளது.
கஞ்சா மற்றும் கோவை சாக்லேட்டுகள் சம்பந்தமாக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பெரியநாயக்கன்பாளையம் சூலூர் போன்ற பகுதிகளில் பறிமுதல் செய்துள்ளோம்.
குறிப்பாக சூலூரில் கிடைக்கப்பெற்ற 250 கிலோ கஞ்சா சாக்லேட் துப்பு கொடுத்தது ஒரு பிரபல கல்லூரியை சேர்ந்த மாணவர்தான்.
அதனடிப்படையில் தான் இந்த 250 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே வட மாநில தொழிலாளர்களையும் தொடர்ந்து நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றோம்.
அந்தப் பகுதிகளில் இருந்து தான் அதிக அளவில் கஞ்சா சம்பந்தப்பட்ட போதை பொருட்கள் தமிழகத்திற்குள் வருகிறது என தெரிவித்தார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/