Advertisment

2ஜி விடுதலை : கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி, ஆ.ராசா

2ஜி வழக்கில் விடுதலை அடைந்த ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் கொண்டாட்டம் கலந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
2G Case, Kanimozhi, A.Raja, DMK, MK Stalin

2G Case, Kanimozhi, A.Raja, DMK, MK Stalin

2ஜி வழக்கில் விடுதலை அடைந்த ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் கொண்டாட்டம் கலந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisment

2ஜி வழக்கில் திமுக கொள்கைப் பரப்பு செயலாளர் ஆ.ராசா, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ நீதிமன்ற தனி நீதிபதி ஓம் பிரகாஷ் சைனி நேற்று விடுதலை செய்தார்.

2ஜி வழக்கில் கிடைத்த விடுதலை, திமுக.வை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது. இதை கட்சிக்கு ‘பூஸ்ட்’ கொடுக்கும் வகையில் கொண்டாட்டமாக முன்னெடுக்க திமுக முடிவு செய்திருக்கிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதை குறிப்பிட்டார்.

2ஜி வழக்கில் விடுதலையான ஆ.ராசாவும், கனிமொழியும் இன்று டெல்லியில் இருந்து கிளம்பி, சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக LIVE UPDATES

பிற்பகல் 2.30 : கனிமொழியின் சிஐடி காலனி இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள், ‘கனிமொழியின் பிறந்த நாளைவிட அதிக மகிழ்ச்சி அடைவதாக’ குறிப்பிட்டார். ‘கனிமொழிக்கு கட்சியில் இதைவிட பெரிய பதவி எதிர்பார்க்கிறீர்களா?’ என கேட்டபோது, ‘அதை ஸ்டாலின் முடிவு செய்வார்’ என்றார் ராசாத்தி அம்மாள்.

பிற்பகல் 2.15 : 2ஜி விடுதலை மகிழ்வை முகத்தில் வெளிப்படுத்தினார் கருணாநிதி. பின்னர் அவரது இல்லம் முன்பு திரண்ட தொண்டர்களை சந்திக்க அவர் அழைத்து வரப்பட்டார். தொண்டர்களை நோக்கி கையசைத்தார் கருணாநிதி.

பிற்பகல் 2.00 : கோபாலபுரம் இல்லத்திற்கு கனிமொழியும், ஆ.ராசாவும் வந்தனர். அங்கும் கரகாட்டம், செண்டை மேளம் உள்ளிட்ட கலைக்குழுவினர் சகிதமாக திமுக.வினர் வரவேற்றனர். கருணாநிதியை சந்தித்து, விடுதலை ஆகிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறினார் கனிமொழி. ஆ.ராசாவும் கருணாநிதியை வணங்கினார். இருவரும் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றனர். கனிமொழிக்கு பேராசிரியர் அன்பழகன் அணிவித்த மலர் மாலையை பெற்றுக்கொண்ட அவர், அதனை கருணாநிதிக்கு அணிந்து மகிழ்ந்தார்.

பகல் 12.40 : துரைமுருகன் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் நேரில் வந்தனர்.   தொண்டர்கள் வரிசையில் நின்று அவர்களுக்கு சால்வைகளையும் பூங்கொத்துகளையும் வழங்கினர்.

பகல் 12.30 : ஆ.ராசாவும், கனிமொழியும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது விமான நிலையமே அதிரும் வகையில் திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்ட சிறு மேடைக்கு வந்த அவர்களுக்கு ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து ஆரத் தழுவி வரவேற்றார்.

பகல் 12.00 : விமான நிலையத்தின் வெளியே பல்லாயிரக் கணக்கில் தொண்டர்கள் திரண்டனர். இதனால் விமான நிலையம் செல்லும் இதர பயணிகளுக்கு வேறு பாதைகள் ஒதுக்கப்பட்டது. விமான நிலையத்தின் வெளிப் பகுதியில் தொண்டர்களை ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் சந்திக்க சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.

பகல் 11.50 : ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் வருகை தந்த விமானம் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை விமான நிலையத்தின் உட்பகுதியில் வரவேற்றனர்.

காலை 11.00 : திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம், திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், கனிமொழியின் சி.ஐ.டி. காலனி இல்லம் ஆகிய இடங்களிலும் தாரை தப்பட்டைகளுடன் தொண்டர்கள் திரண்டனர்.

காலை 10.50 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வந்தார். டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலரும் விமான நிலையம் வந்தனர்.

காலை 10.00 : ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை வரவேற்க சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் பெருமளவில் விமான நிலையத்தில் திரண்டனர். கரகாட்டம், ஒயிலாட்டம் என கிராமிய கலைநிகழ்ச்சிகள், மற்றும் ஆட்டம், பாட்டம் என விமான நிலைய பகுதியே களை கட்டியது.

2G Case, Kanimozhi, A.Raja, DMK, MK Stalin 2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழி, ஆ.ராசா ஆகியோரை வரவேற்க சென்னை விமான நிலையம் வந்த தொண்டர்கள்

 

 

 

Dmk M Karunanidhi A Raja Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment