எடப்பாடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

விவசாயிகளின் தொடர் போராட்டம், நீட் தேர்வு விவகாரம் ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக இருந்து வருகின்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தது இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் தொடர் போராட்டம், நீட் தேர்வு விவகாரம் ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக இருந்து வருகின்றது. இதனால், இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

மேலும், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள், மானிய கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

×Close
×Close