இறுதி மூச்சு வரை காதலியை காப்பாற்ற நினைத்த காதலன் மரணம்... திருச்சியில் சோகம்...

காதலனை கொலை செய்துவிட்டு காதலியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை தேடி வருகிறது காவல் துறை.

திருச்சி கூட்டு பலாத்காரம் : திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இருக்கும் திண்ணக்குளம் ஊரில் வசிப்பவர் கண்ணன். அவருடைய மகன் தமிழ்வாணன். சமயபுரம் அருகில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் கல்வி படித்து வருகிறார்.

அவருடைய காதலி செவிலியர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இருவரும் பொங்கல் தினத்தன்று, சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கும் கொணலை மலை மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பியுள்ளனர்.

திருச்சி கூட்டு பலாத்காரம்

வீடு திரும்புகையில், சாலையோரம் தங்களின் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வழியில் பெரிய அளவில் போக்குவரத்தோ மக்கள் நடமாட்டமோ இருக்காது. அந்த வழியில் வந்த நான்கு நபர்கள், அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தை பார்த்து விசாரிக்கத் தொடங்கினர்.

மேலும் அவர்களின் பேச்சு எல்லை மீறிச் சென்றதை உணர்ந்த தமிழ்வாணனும் அவருடைய காதலியும் அங்கிருந்து புறப்பட முற்படுகையில், தமிழ்வாணனுடன் பிரச்சனையில் ஈடுபட்டு, அவருடைய காதலியிடம் பிரச்சனை செய்யத் தொடங்கினர். தன்னுடைய காதலியை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தார் தமிழ்வாணன். ஆனால், அந்த நான்கு நபர்கள், தமிழ்வாணனை கொலை செய்துவிட்டு, அந்த பெண்ணை நால்வரும் கூட்டுப் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் தன்னுடைய அலைபேசி வாயிலாக 108ற்கு அழைத்து, ஆம்புலன்சை வரவைத்துள்ளார் அந்த பெண். அங்கு வந்த காவல்துறையினர், தமிழ்வாணனின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close