சிக்கிய 'கோடம்பாக்க' பாஜக பிரமுகர்.... ... உள்ளே நுழையும் வருமான வரித்துறை!

இந்நிறுவனம் மூலம், சினிமா படப்பிடிப்புக்குத் தேவையான போலீஸ் சீருடைகளை விற்பனை செய்து வருகிறார்...

சென்னை சூளைமேடு ஜக்கரியா காலனி இரண்டாவது தெருவில் வசிப்பவர் தண்டபாணி. இவர் சென்னை கோடம்பாக்கத்தில் ‘ராமநாதன் அன்ட் சன்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்நிறுவனம் மூலம், சினிமா படப்பிடிப்புக்குத் தேவையான போலீஸ் சீருடைகளை தண்டபாணி விற்பனை செய்து வருகிறார். மேலும், இவர் பாஜக பிரமுகர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள், போலீசார் துணையுடன் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.40 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாக்கப்பட்டிருக்கும் நிலையில், கைப்பற்றப்பட்டுள்ள இந்த 40 கோடி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

×Close
×Close