5 லட்சம் குழந்தைகளை கவர்ந்த சென்னை புத்தக கண்காட்சி... ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை...

820 அரங்குகளில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன

42வது சென்னை புத்தக கண்காட்சி : இந்த வருடம் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 4ம் தேதி கோலகலமாக தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி. 42வது வருடமாக நடைபெற்ற கண்காட்சி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தது. புது முக எழுத்தாளர்களை வாசகர்கள் சென்றடைய சிறந்த களமாக இந்த புத்தக கண்காட்சி அமைந்திருந்தது.

பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள், அரசியல் பகிர்வுகள், நாவல்கள், புதினங்கள், சிறுகதைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.  800க்கும் மேற்பட்ட அரங்கங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

42வது சென்னை புத்தக கண்காட்சி – நிறைவுற்றது

மார்க்சியம் இன்றும் என்றும் (விடியல் பதிப்பகம்) புத்தகம் பெரியார் இன்றும் என்றும், அம்பேத்கார் இன்றும் என்றும் புத்தகங்களின் தொடர்ச்சியாக இம்முறை வெளியானது. 14 நாட்களில் 2000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

பெரியார் இன்றும் என்றும் புத்தகம் இம்முறையும் மக்களால் அதிகமாக தேடப்பட்ட புத்தகமாகும். கடைசி நாளில் புத்தகங்கள் அனைத்தும் தீர்ந்து போனதால் வாசகர்களிடம் புத்தகம் இல்லை என்று கூறிய அலுத்துவிட்டனர் பதிப்பகத்தார்.

இம்முறை பிக்சன் பகுதியில் வெளியான வேள்பாரியும் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தான் இதுவரையில் புத்தகங்கள் கிடைத்துள்ளன. கவுண்ட்டர் சேலில் புத்தகம் கிடைக்காமல் போனது அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கரன் கார்க்கியின் அறுபடும் விலங்கு, மரப்பாலம் புத்தகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

இம்முறை புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் (5 லட்சம்) என்பதால், வரும் காலத்தில் அதிக அளவு வாசகர்கள் உருவாகி வருவார்கள் என்று பபாசி தலைவர் நேற்று கூறினார்.  820 அரங்குகளில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : 2016 தமிழகத் தேர்தல் வரலாறு… தமிழகம் தடம் புரண்ட கதை சொல்லும் நியதி என்ன ?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close