கோயம்பேட்டில் கத்திமுனையில் சொகுசு பேருந்தை கடத்த முயற்சி செய்த கும்பல்!

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள கேபிஎன் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருவபவர் மதுரையை சேர்ந்த கோதிராஜ்.இவர் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கோயம்பத்தூர் செல்லவதற்காக பேருந்தில் பயணிகளுக்கு காத்திருந்ததார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பேருந்தில் ஏறியது. மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி, பேரூந்தை தாங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லுமாறு மிரட்டியது. இதைக்கண்ட பேரூந்தில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். இதனால், ஓட்டுநரை தாக்கிய அந்த கும்பல் பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அந்த கும்பலை துரத்திப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது, அந்த கும்பலில் இருந்து தினேஷ் என்பவரை மட்டும் மடிக்கி பிடித்தனர். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, தனது சொந்த ஊர் திருவள்ளூர் வெள்ளவேடு என்றும் தப்பியோடியவர்களில் கணேஷ் என்பவரை மட்டும் தனக்கு தான் தெரியும் என்று கூறியுள்ளார். மற்ற நபர்கள் கணேஷின் நண்பர்கள் என்றும், அவர்கள் குறித்து தனக்கு தெரியாது. குடிபோதையில் இவ்வாறு செய்ததாக அந்த நபர் கூறினார்.

மேலும் தினேஷ் மற்றும் கணேஷ் ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு வேல்லவேடு ஊர்தலைவரை கொலை செய்த வழக்கில் சம்பத்தப்பட்டு சிறை சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

×Close
×Close