Advertisment

”நீங்கள் செய்யும் சிறு தவறு மாணவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும்” பிளஸ் டூ விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த 500 ஆசிரியர்களுக்கு கல்வித்துறை நோட்டீஸ்.

தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu teachers

Tamil Nadu teachers

பிளஸ் டூ விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக நடந்துக் கொண்ட 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அதிரடி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

Advertisment

பிளஸ் டூ.. ஒவ்வொரு மாணவர்களின் வாழ்க்கையிலும் உயர்கல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்குயாற்றுவது இந்த பிளஸ் டூ மதிப்பெண்கள் தான். மாணவர்கள் அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் கல்லூரி தொடங்கி அவர்களி மேல்படிப்பு வாழ்க்கை முறை என அனைத்தையும் முடிவு செய்வதாக இந்த பிளஸ் டூ மதிப்பெண்கள் இருந்து வருகின்றன.

மாணவர்களின் விடைத்தாளை திருத்தும் ஆசிர்யர்கள் தான் அப்போதைக்கு மாணவர்களின் கடவுள்கள்.

சுமாராக எழுதிய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் நன்றி கூறுவது பேப்பரை திருத்திய டீச்சருக்கு தான். அதே போல் சூப்பராக எழுதிய மாணவர்களுக்கு கம்மியான மார்க் வந்தாலும் அவர்கள் திட்டி புலம்புவது பேப்பரை திருத்திய ஆசிரியரை தான்.

இப்படி பிளஸ் டூ மாணவர்களின் மதிப்பெண்களில் முக்கிய பாங்காற்றும் ஆசிரியர்கள் கவனக்குறைவால் செய்யும் சிறு தவறு எத்தனையோ மாணவர்க்ளின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டதை பலமுறை நாம் செய்திகளில் வாசித்திருப்போம். அந்த வகையில் இம்முறை நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வு விடைத்தாளை திருத்திய 500 ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டு 72 மையங்களில் 25,000 ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மில்லியன் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.

தங்களது மதிப்பெண்கள் தவறாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் 50,000 மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட நகலைப் பார்த்தபோதுதான் கூட்டலில் பிழைகள் இருப்பது தெரியவந்தது.

மேலும், சில விடைத்தாள்கள் முறையாகத் திருத்தப்படாமல் மதிப்பெண்கள் வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

ஒரு விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு 4 ஆசிரியர்கள் பொறுப்பேற்கிறார்கள். தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் மீண்டும் வழங்கப்பட்டு உள்ளன.

விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் தவறிழைத்து இருப்பதை இணை இயக்குநர்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

தவறிழைத்த 500க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தவறு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.தவறுக்கு காரணமாக உள்ள ஆசிரியர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

School Education Department Minister Sengottaiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment