Advertisment

7 வயது சிறுவன் வாயில் 526 பற்கள்... மருத்துவர்கள் அதிர்ச்சி!

அந்த சிறுவன் வாயில் இருந்து எடுக்கப்பட்ட பற்களின் மொத்த எடை 200 கிராம் என மருத்துவர்கள் தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
526 Teeth removed from 7-year-old Ravindran

526 Teeth removed from 7-year-old Ravindran

526 Teeth removed from 7-year-old Ravindran : சென்னையில் வசித்து வரும் பிரபுதாஸ் என்பவரின் மகன் ரவீந்திரன். மூன்று வயதில் இருந்து வாயின் கீழ் தாடையில் வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று அப்போது கண்டுபிடிக்க இயலவில்லை.  தற்போது அவருக்கு வயது 7 ஆகும். வீக்கம் அதிகரித்து, வலியால் துடித்த அவரை சென்னையில் இருக்கும் சவீதா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருடைய பெற்றோர்கள்.

Advertisment

526 Teeth removed from 7-year-old Ravindran

அவருக்கு அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்ட போது அவரின் வாயில் சிறுதும் பெரிதுமாக வளர்ச்சியடையாத பற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை உறுதி செய்ய சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது.  பின்னர் மருத்துவர் ரமணி மற்றும் அவருடைய மருத்துவக் குழு, அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு 4 x 3 செ.மீ அளவு கொண்ட கட்டி ஒன்றை வலது கீழ் தாடையில் இருந்து நீக்கினார்கள்.

அந்த கட்டியை ஆய்விற்கு உட்படுத்திய போது தான் தெரிந்தது அதனுள் மொத்தம் 526 பற்கள் இருந்துள்ளது என. ரவீந்திரனுக்கு கீழ் தாடையில் நிரந்தர பற்கள் எதுவும் இதுவரை முளைக்கவில்லை.  எடுக்கப்பட்ட பற்களின் மொத்த எடை 200 கிராம்கள் ஆகும். இதற்கு முன்பு 2014ம் ஆண்டு மும்பையில் 17 வயது மிக்க ஒருவருக்கு அறுவை சிகிச்சையின் போது 232 பற்கள் நீக்கப்பட்டது தான் ஹையஸ்ட் ரெக்கார்ட்டாக இருந்தது.

சவீதா மருத்துவக் குழு இது குறித்து குறிப்பிடுகையில், உலகில் இது போன்று ஒருவர் வாயில் இருந்து  526 பற்கள் நீக்கப்படுவது இதுவே முதல்முறை என்று மேற்கோள் காட்டியுள்ளனர்.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment