Advertisment

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates : தமிழகத்தில் ஜனவரி 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வி இயக்குநர்

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு இருந்துவந்த நிலையில், தமிழக அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது குறித்து பல்வேறு கல்வியாளர்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடந்து, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மட்டுமே இந்த பொதுத்தேர்வு நடத்தப்படுவதாகவும், இது குறித்து மாணவர்களோ, பெற்றோர்களோ அச்சம் அடைய தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்வு அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

publive-image 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை

8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2020, மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி முடிவடைகிறது. மாணவர்கள் வினாத்தாள் படிப்பதற்கு 10 நிமிடமும் விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி, 12.15 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் காலை 10.00 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.15 மணிக்கு முடிவடையும்.

8 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை

தமிழ் - 30.03.2020

ஆங்கிலம் - 02.04.2020

கணிதம் - 08.04.2020

அறிவியல் - 15.04.2020

சமூக அறிவியல் - 17.04.2020

5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவடைகிறது.

இதில், மாணவர்கள் வினாத்தாள் படிப்பதற்கு 10 நிமிடம், விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி, 12.15 மணி வரை நடைபெற உள்ளது.

ஐந்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம் கணிதம் பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு

ஐந்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

தமிழ் - 15.04.2020

ஆங்கிலம் - 17.04.2020

கணிதம் -20.04.2020

Tamilnadu Tamil Nadu School Education Department School Education Department Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment