கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக 4 நாட்கள் விடுமுறை விடப்படும்.
ஜன.13 போகிப் பண்டிகை, ஜன.14 தைப் பொங்கல், ஜன.15 மாட்டுப் பொங்கல், ஜன.16 உழவர் திருநாள் என 4 நாட்கள் விடுமுறை விடப்படும். இம்முறை பொங்கல் தொடக்கத்திலும், பொங்கல் முடியும் நாட்களில் வார விடுமுறை என்பதால் தொடர்ந்து 9 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக பேருந்துகள் இயக்கப்பபட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து மட்டும் 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
போக்குவரத்து துறை அறிக்கைபடி, கடந்த 10/01/2025 முதல் 12/01/2025 இரவு 24.00 மணி வரை 11,463 பேருந்துகளில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 6.40 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதே போல ரயில், ஆம்னி பேருந்துகள், கார்களிலும் பல லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.