Advertisment

எம்.ஐ.டி -67, கிண்டி – 4; அண்ணா பல்கலை. வளாகங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி வளாகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
எம்.ஐ.டி -67, கிண்டி – 4; அண்ணா பல்கலை. வளாகங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

67 students test positive to corona in Anna University MIT campus: அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்.ஐ.டி வளாக விடுதியில் 67 பேருக்கும், கிண்டி வளாக வெளிநாட்டு விடுதியில் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 2,731 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி வளாகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணாப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக செயல்பட்டு எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் மட்டும் சுமார் 1,600 மாணவர்கள் தங்கி உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதல்கட்டமாக 1,417 மாணவ-மாணவிகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 67 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் மாணவிகள் ஆவர்.

இதையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

எம்.ஐ.டி வளாகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவும் இன்னும் வரவில்லை. சுகாதார அதிகாரிகள் கல்வி நிறுவனத்தில் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவலை அடுத்து எம்.ஐ.டி கல்வி நிறுவனத்துக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதேபோல், அண்ணா பல்கலைக்கழக வெளிநாட்டு விடுதியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் 12 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Corona Virus Anna University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment