பெருமை கொள்ளும் தருணம்: நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியை!

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர்.

நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியை ஆர்.ஸதி- யை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர்.

நல்லாசிரியர் விருது:

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் …   ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு ஈடு இணையில்லாதது.    இப்படிப்பட்ட  ஆசிரியர்களை தினமும் கொண்டாடினாலும் தவறில்லை.   ஆண்டுதோறும் செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக கொண்டாப்படுகிறது.

இதனையொட்டி ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களை மத்திய அரசும், மாநில அரசும் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் `தேசிய நல்லாசிரியர் விருது’ பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிப்புரிந்து வரும் ஆர்.ஸதி, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும், `குட்டி கமாண்டோ’ திட்டம் போன்றவற்றின் மூலம் எண்ணற்ற மாற்றங்களை தனது பள்ளியில் செயல்படுத்தினார்.

இவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்தனர். இவரின் பல்வேறு முயற்சிகள் மூலம் அவரது கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றியுள்ளதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

டெல்லியில் இன்று (5.9.18) நடைபெற உள்ள விழாவில், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு ஸதிக்கு நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார். நேற்று நடந்த விழாவில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

தமிழக ஆசிரியர் ஸ்தி,  தேசிய நல்லாசிரியர் விருது வாங்குவதை பாராட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளார். இதுக் குறித்து அவர் கூறியிருப்பது, “ தலைமையாசிரியை ஸதி பல்வேறு சமூக நடவடிக்கைகள் மூலம் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியுள்ளார்.

இவரின் பல்வேறு முயற்சிகள் மூலம் அவரது கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றியுள்ளார். மேலும், கல்வி சாராத நடவடிக்கைகளிலும் அவர் சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close