Advertisment

விதவைப் பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்த ஆட்டோ டிரைவர்கள்.. 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு.. நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதவைப் பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்த ஆட்டோ டிரைவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

author-image
WebDesk
New Update
A case has been registered against 4 auto drivers who tied up the woman in the pole

அருமனையில் பெண்ணை கட்டி வைத்த ஆட்டோ டிரைவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மேல்புறம் வடலிவிளை என்ற பகுதியில் 33 வயதான விதவைப் பெண் ஒருவர் வசித்துவருகிறார்.

இவர் அந்தப் பகுதியில் செல்லும்போதெல்லாம் அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் கிண்டல், கேலி செய்துவந்துள்ளனர். இதனால் கோபமுற்ற அப்பெண், வீட்டில் உள்ள கத்தியை எடுத்துக் கொண்டு இனிமேல் கிண்டல் செய்தால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பேன் என எச்சரித்துள்ளார்.

Advertisment

இதைப் பொருட்படுத்தாத ஆட்டோ டிரைவர்கள் அப்பெண்ணை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து கேலி கிண்டலை தொடர்ந்துள்ளனர். இதை அப்பகுதியில் சென்ற இளைஞர்கள் காணொலியாக பதிவுச் செய்து காவல் நிலையத்துக்கு அனுப்பினர்.

இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சசி(47) ,வினோத்(44), திபின் (38), விஜயகாந்த் (37), அரவிந்த் (33) ஆகியேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியர்ளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment