Advertisment

அம்பேத்கர், பெரியாரை படிக்காமல் இந்தியாவில் அரசியலில் வரக்கூடாது: ஆ. ராசா

வெள்ளைக்காரர்களுக்கு மனிதாபிமானம் இருந்தது. வெள்ளைக்காரனை பெரியார் ஆதரித்ததற்கு அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வியை வழங்க நினைத்தார்கள். பெரியார் சுதந்திரத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

author-image
WebDesk
New Update
Rasa

MP A Rasa

200 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு போர் நடந்து வருகிறது. 70 ஆண்டுகளாகியும் 6% மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என்று திமுக எம்.பி. ஆ. ராசா கூறினார்.

Advertisment

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசியவர், காங்கிரஸ் மட்டுமின்றி பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் தமிழகம் உட்பட்ட மாநிலங்களிலும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை புரிந்து கொள்வதற்கு மறுப்பவர்களாக உள்ளனர்.

1800 களில் துவங்கியதே இட ஒதுக்கீடு. இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்டவர்களாக தற்போது வரை இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அறிமுகப்படுத்தியது வெள்ளைக்காரன்.

பின் தங்கியவர்கள் என்ற வார்த்தை கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்டதை, அம்பேத்கர் சமூகத்தில்  கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காக மாற்றினார்.  

வெள்ளைக்காரர்களுக்கு மனிதாபிமானம் இருந்தது. வெள்ளைக்காரனை பெரியார் ஆதரித்ததற்கு அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வியை வழங்க நினைத்தார்கள். பெரியார் சுதந்திரத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

கல்வி 2000 ஆண்டு 3000 ஆண்டாக மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்ட கல்வியை நான் கேட்காமலேயே கொடுக்கும் மனம் வெள்ளைக்காரனுக்கு இருந்தது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பை தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வைத்திருந்தவர்கள் வெள்ளைக்காரர்கள். வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர், காந்தியை பார்த்து என்ன ரெஃபர் பண்ண நீ யார் என்றார். அப்பறம் தான் தனித்தொகுதி கொடுத்தார்கள்.

publive-image
publive-image

கஷ்டப்பட்டு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டை 10% தெரியாமல் எடுத்துப் போகிறார்கள்.

ஜாதியால் இட ஒதிக்கீடு கொடுக்க வேண்டாம் என்றார்கள். அப்போது அம்பேத்கர், யாரெல்லாம் சமூகத்தில் பின்தங்கி உள்ளார்களோ அவர்களை கவனித்துக் கொள்கிறேன் என்றார்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியல் வெள்ளைக்காரர்களிடம் இருந்ததால் இட ஒதுக்கீடு எனக்கு எளிதாகிவிட்டதாக அம்பேத்கர் சொன்னார். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களும் அதிகாரத்தில் வர வேண்டும் என்றார்.

அம்பேத்கர், பெரியாரை படிக்காமல் இந்தியாவில் அரசியலில் வரக்கூடாது

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கல்வி வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்ற அம்பேத்கர். அதற்கு ஆணையத்தை ஏற்படுத்த மறுத்தவர் நேரு.

இட ஒதுக்கீடு தான் இந்திய அரசியல்.

200 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு போர் நடந்து வருகிறது.

70 ஆண்டுகளாகியும் 6% மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது, 5.9% பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

30,000 மேல் ஊதியம் பெறுபவர்களில் தனியார் துறையில் 85%ல் 0.97% தாழ்த்தப்பட்டவர்களுக்கு, 3% பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 15% அரசு துறையில் வேலைவாய்ப்பில் 6% தாழ்த்தப்பட்டவர்களிடம் உள்ளது.

இட ஒதுக்கீட்டை தெரிந்து கொள்ள மண்டல் கமிஷனை படியுங்கள். பெரியாரை அண்ணாவை கலைஞரை படியுங்கள் ஸ்டாலினை ஆதரியுங்கள். இவ்வாறு பேசினார்.

இந்த நிகழ்வில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, ஆதித்தமிழர் பேரவை அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment