Advertisment

ஆசிரியைக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி.. குற்றம் என்ன?

கோவிந்தராஜிடம் வாங்கிய கடன் தொகைக்காக சித்ரா கொடுத்த காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
A teacher was sentenced to one month in jail in a cheque fraud case

கைதி தப்பி ஓட்டம்

திருச்சி பாலக்கரையை சார்ந்தவர் கோவிந்தராஜ். இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

Advertisment

இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு திருச்சி லால்குடி, வாளாடியை சார்ந்த சேகர் என்பவரது மனைவி ஆசிரியை சித்ரா என்பவர் ரூபாய் 3 லட்சத்து ஐம்பதாயிரம் கடனாக வாங்கியிருந்தார்.

இந்நிலையில் கோவிந்தராஜிடம் வாங்கிய கடன் தொகைக்காக கொடுத்த காசோலை சித்ரா வங்கியில் பணமில்லாமல் திரும்பியுள்ளது.

இது குறித்து பலமுறை தனது பணத்தை கேட்டும் அவர் தராததால், கோவிந்தராஜ் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் -3 திருச்சி நீதிமன்றத்தில் சித்ராவிற்கு எதிராக காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.

மேற்படி வழக்கை விசாரித்து இன்று (16.03.2023) தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆசிரியை சித்ராவிற்கு ஒரு மாத சிறைதண்டனை மற்றும் காசோலை தொகையை அபராதமாக மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

சித்ரா திருச்சி லால்குடி மருதூர் பஞ்சாயத்து யூனியன் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

செய்தியாளர் க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment