எடப்பாடிக்காக காத்திருந்த ஆம்புலன்ஸ் : பரபரப்பு வீடியோ காட்சிகள்

முதலமைச்சர் விமானநிலையத்தில் தான் பேசிக்கொண்டிருக்கிறார், அதற்காக இப்போதே போக்குவரத்தை நிறுத்துவது நியாயமா? என்று கேள்வி எழுப்புகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்வதற்காக, ஆப்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள இந்த வீடியோ சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிரேயுள்ள பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீஸார் வாகன போக்குவரத்தை நிறுத்தி வைத்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு ஆம்புலன்ஸும் எச்சரிக்கை ஒலியை எழுப்பியபடியே வரிசையில் காத்து நின்றது.

இது அங்கு நின்றிருந்த வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கூட்டத்தில் இருந்த ஒருவர் கூறும்போது, முதலமைச்சர் விமானநிலையத்தில் தான் பேசிக்கொண்டிருக்கிறார், அதற்காக இப்போதே போக்குவரத்தை நிறுத்துவது நியாயமா? என்று கேள்வி எழுப்புகிறார். மேலும், போக்குவரத்து நெரிசலில் ஆப்புலன்ஸ் சிக்கியுள்ளது என்றும், அதற்கு வழிவிடும்படியும், கூட்டத்தில் குரல் சத்தம் கேட்கிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

×Close
×Close