Advertisment

நெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வணிக வரி துறை அமைச்சர்க்கு எதிராக வழக்கு

வணிக வரி துறை அமைச்சர்க்கு எதிராக வழக்கு

நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

Advertisment

தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு

அந்த மனுவில், ஒட்டன்சத்திரம் - தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருநெல்வேலி - செங்கோட்டை கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சேகர்ரெட்டி நாகராஜன், பி. சுப்ரமணியம் ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

வண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் "எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஐந்து வருடங்களான 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” விற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட சுமார் 4800 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் உறவினர் பி. சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன் செய்யாத்துரை, சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதன் மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலமும் சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார். ஆகவே முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொது ஊழியர் என்ற முறையில் 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படியும் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார்.

ஆகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சுமார் 4800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவே நான் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உத்தரவிட வேண்டும் மேலும் இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள அதிகாரிகளே உரிய முறையில் டெண்டர் நடைமுறைகளை விசாரித்ததாகவும், அதன் விபரங்களை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்தார். இதனையடுத்து, அரசின் பதில் குறித்து விளக்கமளிக்க ஆர்.எஸ். பாரதி தரப்பில் அவகாசம் வழங்கபட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெகதிஷ் சந்திரா முன் இன்று மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ, லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த அறிக்கைகளை பார்க்கும் போது நியாமாக விசாரனை நடக்காது என்பது தெளிவாக தெரிவதால் இந்த வழக்கை. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் .

முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை நியாமான முறையில் விசாரணை நடந்தவில்லை, மேலும் புகார் அளித்தவரை இதுவரை விசாரணைக்கு கூட லஞ்ச ஒழிப்பு துறை அழைக்கவில்லை எனவே இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு பிரப்பிக்க வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து திமுக தரப்பில் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர்.

அப்போது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயண், தலைமை வழக்கறிஞர், நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெற்றதாற்கான ஆதாரங்கள் எதுவும் முதல்கட்ட விசாரணையில் கிடைக்கவில்லை, முதல்வர் மீதான திமுக புகாரின் ஆரம்பகட்ட விசாரணையிலேயே அவருக்கு எதிரான முகாந்திரம் எதுவும் இல்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை.

எனவே முதல்வர்க்கு எதிரான டெண்டர் முறைக்கேடில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் முதல் கட்ட விசாரணை கிடைக்கவில்லை. முதல்கட்ட விசாரணையில் முகந்திரம் இருக்கும் பட்சத்தில் தான் புகார் அளித்தவரை விசாரிக்க வேண்டும் எனவே தற்போது அவரிடம் விசாரிக்க வேண்டியதில்லை என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, நெடுஞ்சாலை துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை யார் கட்டுப்பாட்டில் கீழ் இயங்குகிறது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், லஞ்ச ஒழிப்பு துறையானது தன்னிச்சையாக செயல்படகூடிய அமைப்பு ஆகும். மேலும் தங்களுடைய விசாரனை விவரங்களை கூடாது லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபியிடம் தெரிவிக்க தேவையில்லை என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குனரை யார் நியமிப்பது என கேள்வி எழுப்பினார். மூத்த கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை அரசு நியமிக்கும் என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment