ரஜினி புதுக்கட்சி தொடக்கமா...? நேரடியாக சந்தித்தார் ஆனந்த்ராஜ்?

அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற முடிவுக்கு ரஜினிகாந்த் வந்துவிட்டார். இதற்கான முதற்கட்ட ஆலோசனையை அவர் முடித்துள்ளார்

சமீபத்தில் நடந்து முடிந்த ரசிகர்களுடனான சந்திப்பின் போது, தான் அரசியலுக்கு வருவது சில கருத்துக்களை ரஜினி முன்வைத்தார். அன்று முதல் இன்று அவரை அவரது டாபிக் தான் பெரும்பாலான தொலைக்காட்சிகளில். இதுகுறித்து கருத்து தெரிவிக்கவே, பல பேர் ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடர்ந்துள்ளார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

இந்நிலையில், “அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற முடிவுக்கு ரஜினிகாந்த் வந்துவிட்டார். இதற்கான முதற்கட்ட ஆலோசனையை அவர் முடித்துள்ளார். கட்சியின் கொடி, சின்னம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் ரஜினியால் வெளியிடப்படும். ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க மட்டுமே வாய்ப்புகள் உள்ளன. அவர் எந்த அரசியல் கட்சியிலும் இணையமாட்டார்” என ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கூறியதாக இன்று தகவல்கள் வெளியாகின.

அதனை தற்போது சத்யநாராயணராவ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், “ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் சொல்லவில்லை. யாரோ தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்” என்றார்.

இந்த சூழ்நிலையில் மற்றுமொரு தகவலாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்த்ராஜ், ரஜினியை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

×Close
×Close