Advertisment

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரமில்லை இது ! யாரை சொல்கிறார் கமல்?

அணிசேரா தொழிலாளர்கள் எங்கனம் பசியாறுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வேண்டுகோள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்?': கொரோனா குறித்து கமல் கவிதை

Actor Kamal Haasan tweets on 21 days lockdown : இந்தியாவில் பரவிவரும் கொரோனா நோயினை தடுக்க நேற்று இரவு 8 மணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோதி மக்களிடம் பேசினார். எதிர்வரும் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவினை பின்பற்ற மறுப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

Advertisment

மேலும் படிக்க : நியூயார்க் சென்று திரும்பிய ஹவாய் அழகிக்கு கொரோனா… அரசிடம் முக்கிய வேண்டுகோள்

Actor Kamal Haasan tweets on 21 days lockdown

சமூக இடைவெளியே இந்த நோயின் பரவலை தடுப்பதற்கு உதவும் என்பதால் பலரும் இந்த அறிவிப்பினை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு தொடர்பாக முக்கிய கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார் கமல் ஹாசன்.

அதில் அணி சேரா தொழிலாளர்களின் நலன் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இது கிடையாது. இந்தியாவின் நிதி நிலையை காத்தவர்கள் சிறு தொழில் செய்பவர்கள் மட்டுமே. அவர்களை உதாசீனம் செய்தவர் பதவி இழப்பார் என்றும் கமல் ஹாசன் அந்த ட்வீட்டில் அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Coronavirus Corona Corona Virus Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment