Advertisment

இயற்கை இத்தனை அவசரமாக விவேக்கை பறித்ததேன்?; மோடி, எடப்பாடி, ஸ்டாலின் இரங்கல்!

சமூக நலனை குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட நடிகர் விவேக், பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். அவருடைய இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.

author-image
WebDesk
New Update
இயற்கை இத்தனை அவசரமாக விவேக்கை பறித்ததேன்?; மோடி, எடப்பாடி, ஸ்டாலின் இரங்கல்!

Today Tamil News : தமிழ் திரையுலக ரசிகர்களை தனது வசனங்களால், முன்னோக்கி அழைத்துச் சென்ற நடிகர் விவேக், மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகமும், ரசிகர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் மறைவானது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவையும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்து வந்துள்ளன. அவரது படங்களிலும் அவரது வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை பிரகாசித்ததை நாம் பார்த்து வந்துள்ளோம். விவேக்கின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது இரங்கலை தெரிவிப்பதாக பிரதமர் மோடி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விவேக்கின் மறைவுச் செய்தியை கேட்டதில் மன வேதனை அடைந்ததாக, தமிழக முதல்வர் இரங்கல் செய்தியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவரது இரங்கல் செய்தியில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய பின், சுமார் 30 ஆண்டுகளுக்கு திரைத் துறையில் கோலோச்சியவர் நடிகர் விவேக். அவரின் நடிப்பில் வெளிவந்த ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘உன்னருகே நானிருந்தால்’, ‘உத்தமப் புத்திரன்’, ‘பட்ஜெட் பத்மநாபன்’ போன்ற படங்களில், அவரது நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்துள்ளது.

சமூக நலனை குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட நடிகர் விவேக், பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். அவருடைய இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது எனவும், அவரது நடிப்பு மற்றும் சமூக சேவை என்றென்றும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிக்கும் எனவும் முதல்வர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சின்னக் கலைவாணர் விவேக்கின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். சூழலியல் ஆர்வலர். தனது நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்ததேன்? அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கலைச்சேவையும், மக்கள்சேவையும் புரிந்திட்ட மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் விவேக்கின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Eps Actor Vivek Vivek Death
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment