சிவாஜி கணேசன் சிலை மாற்றக் கோரும் மனு: 4 வாரத்தில் பதில் தர உத்தரவு

வரும் 21-ம் தேதி சிவாஜி கணேசனின் நினைவு நாள் வரவிருப்பதால் அன்று மட்டும் சிலையை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.

சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் சிவாஜி சிலையை, சாலை நடைபாதையில் உள்ள பிற தலைவர்கள் சிலைகள் அமைந்துள்ள பகுதிக்கு மாற்ற கோரிய மனு குறித்து 4 வாரத்திற்குள் சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பேரவையின் தலைவர் சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவில், நடிகர் திலகம் மறைந்த சிவாஜி கணேசனுக்கு சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி கடந்த 2006-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில், 2014-ம் ஆண்டு சிலை மாற்றியமைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டி அதில் இந்த சிலையை நிறுவ இருப்பதாக 2015-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டபேரவையில் அறிவித்தார். தற்போது மணிமண்டபத்தின் கட்டுமான பணிகள் முடிந்து திறக்கும் நிலையில் உள்ளது. இந்த மணிமண்டபம் திறக்கும் முன் சிவாஜி சிலையை காமராஜர் சாலை நடைபாதையில் பிற தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதிக்கு மாற்றி அமைக்க கோரி கடந்த செப்., மற்றும் மே மாதம் வழங்கிய மனுக்களை தமிழக அரசு பரிசீலித்து அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், பணிகள் முடிந்தவுடன் சிலை மணிமண்டபத்திற்கு மாற்றப்படும் என தெரவித்தார். மேலும், இந்த வழக்கினால் சிவாஜி சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, வரும் 21-ம் தேதி சிவாஜி கணேசனின் நினைவு நாள் வரவிருப்பதால் அன்று மட்டும் சிலையை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார். மேலும், சிவாஜி சிலையை பிற தலைவர்கள் சிலையுடன் சேர்த்து அமைக்க கோரிய மனு குறித்து சென்னை மாநகர தலைமை பொறியாளர், சென்னை மாநகர காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

×Close
×Close