Advertisment

ஜோதிகா பேசிய கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்: சூரியா அறிக்கை

நடிகை ஜோதிகாவின் பேச்சு சர்ச்சையான விவகாரத்தில், ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அவரது கணவர் நடிகர் சூரியா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor suriya statement support to jyothika, jyothika controversy speech, suriya support jyothika, நடிகர் சூர்யா அறிக்கை, சூர்யா, ஜோதிகா, ஜோதிகாவின் பேச்சில் உறுதியாக இருக்கிறோம், ஜோதிகா சர்ச்சை பேச்சு, suriya statement we are strong on jyothika speech, joythika, actor suriya, tamil cinema news, latest suriya news, actor suriya news, actress jyothika news, jyothika contoroversy

actor suriya statement support to jyothika, jyothika controversy speech, suriya support jyothika, நடிகர் சூர்யா அறிக்கை, சூர்யா, ஜோதிகா, ஜோதிகாவின் பேச்சில் உறுதியாக இருக்கிறோம், ஜோதிகா சர்ச்சை பேச்சு, suriya statement we are strong on jyothika speech, joythika, actor suriya, tamil cinema news, latest suriya news, actor suriya news, actress jyothika news, jyothika contoroversy

நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் விழாவில், கோயில்கள் பற்றி பேசிய வீடியோ, சமூக ஊடகங்களின் வழியாக அண்மையில் சர்ச்சையானது. இதையடுத்து, சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் நடிகை ஜோதிகாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், ஜோதிகாவின் கணவர் நடிகர் சூரியா, மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்துப்படி ஜோதிகா எப்போதொ பேசியது சமூக ஊடகங்களில் விவாதமாக மாறியிருக்கிறது. ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் இன்னும் உறுதியாகவே இருக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் சூரியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌. ஒரு விருது வழங்கும்‌ விழாவில்‌ எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில்‌ செய்தியாகவும்‌, சமூக ஊடகங்களில்‌ விவாதமாகவும்‌ மாறி இருக்கிறது.

‘கோயில்களைப்‌ போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ உயர்வாகக் கருத வேண்டும்‌’ என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, 'சிலர்‌' குற்றமாகப் பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்‌ போன்ற ஆன்மிகப்‌ பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள்‌. 'மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்‌ செலுத்தும்‌ காணிக்கை' என்பது 'திருமூலர்‌' காலத்துச் சிந்தனை. நல்லோர்‌ சிந்தனைகளைப்‌ படிக்காத, காது கொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ இறைவன்‌ உறையும்‌ இடமாகக் கருத வேண்டும்‌ என்ற கருத்தை, எல்லா மதத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ வரவேற்கவே செய்கின்றனர்‌. 'கரோனா தொற்று' காரணமாக இயல்பு வாழ்க்கை‌ பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும்‌, எங்களுக்குக் கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும்‌, மகிழ்ச்சியையும்‌ அளித்தது.

அறிஞர்கள்‌, ஆன்மிகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. “மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌' என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌. தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாகச் சிலர்‌ அவதூறு பரப்பும்‌ போதெல்லாம்‌, நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்குத் துணை நிற்கிறார்கள்‌.

முகமறியாத எத்தனையோ பேர்‌ எங்கள்‌ சார்பாக பதில்‌ அளிக்கிறார்கள்‌. ஊடகங்கள்‌ சரியான விதத்தில்‌ இச்சர்ச்சையைக்‌ கையாண்டன. 'நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்‌' என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்‌ செய்கிறார்கள்‌. எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்‌ அனைவருக்கும்‌ எங்களின்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌” என்று சூரியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நடிகை ஜோதிகாவின் பேச்சு சர்ச்சையான விவகாரத்தில், ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அவரது கணவர் நடிகர் சூரியா அறிக்கை வெளியிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Cinema Jyothika Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment