வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் நடிகர் விஜய்!

நடிகர் விஜயுடன் அவருடைய ஆடிட்டர்களும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்கள்

Actor Vijay, Anbu Chezhiyan income tax department enquiry : நடிகர் விஜய் வீட்டில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை சினிமா  உலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் படத்தின் வசூல் ரூ.300 கோடியை தாண்டியது என்ற தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கும் மேலான வருமானம், வருமான வரித்துறையினர் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டது என்று கூறி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

மாஸ்டர் படபிடிப்பில் பிஸியாக இயங்கி வந்த நடிகர் விஜய் நெய்வேலியில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இரண்டு நாட்கள் சோதனை நடைபெற்ற நிலையில் அவர் மீண்டும் நெய்வேலியில் படபிடிப்பில் கலந்து கொண்டார். நேற்றுடன் அந்த படபிடிப்பு நிறைவுற்றது. இது தொடர்பான முழுமையான செய்திகளை படிக்க

இதே சமயத்தில் ஏ.ஜி.எஸ். சினிமாஸ் நிறுவனத்தின் ஃபைனான்சியர் அன்பு செழியன் வீடுகளிலும் பிகில் வருமானம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. நடிகர் விஜய் மற்றும் ஃபைனான்சியர் அன்பு செழியன் ஆகியோர் நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளித்துள்ளது வருமான வரித்துறை. பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திற்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக விசாராணைக்கு ஆஜராக இயலாது. கூடுதல் அவகாசம் வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.  ஆனால் கூடுதல் அவகாசம் வழங்க வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் நடிகர் விஜய்.

வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான விஜய்

நடிகர் விஜய், ஃபைனான்சியர் அன்புசெழியன் மற்றும் விஜயின் ஆடிட்டர்கள் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலத்தில் நேற்று (11/02/2020) ஆஜராகினார்கள். அவர்களிடம் வருமான வரித்துறையினர் தங்களின் விசாராணையினை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் பின்னால் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்று பாஜக உறுப்பினர் மற்றும் முன்னாள் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close